×

ஆந்திரா- உடலில் பிளாஸ்டர் ஒட்டி மது கடத்தல் – 2 பேரை கைது செய்த போலீஸ்

ஆந்திரா – திருப்பதி தெலுங்கானா மாநிலத்தில் இருந்து, ஆந்திராவுக்கு புது டெக்னிக்கில் மதுபாட்டில்களை கடத்தி வந்த இருவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டத்தில் இருந்து மது பாட்டில்களை வாங்கிய ராஜேஷ் மற்றும் சீனிவாசன் ஆகியோர், ஆந்திர மாநிலம் கன்னவரத்திற்கு மது பாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்வதற்காக திட்டமிட்டிருந்தனர். இதற்கான நூதனமான முறையில், தங்களது உடலில் மது பாட்டில்களை வைத்து பிளாஸ்டர் போட்டு ஒட்டி கொண்டனர். பின்னர் அதன் மேல் டீசர்ட்
 

ஆந்திரா – திருப்பதி

தெலுங்கானா மாநிலத்தில் இருந்து, ஆந்திராவுக்கு புது டெக்னிக்கில் மதுபாட்டில்களை கடத்தி வந்த இருவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

பிளாஸ்டர் ஒட்டி மது கடத்தல்

தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டத்தில் இருந்து மது பாட்டில்களை வாங்கிய ராஜேஷ் மற்றும் சீனிவாசன் ஆகியோர், ஆந்திர மாநிலம் கன்னவரத்திற்கு மது பாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்வதற்காக திட்டமிட்டிருந்தனர்.

மது கடத்தல்


இதற்கான நூதனமான முறையில், தங்களது உடலில் மது பாட்டில்களை வைத்து பிளாஸ்டர் போட்டு ஒட்டி கொண்டனர். பின்னர் அதன் மேல் டீசர்ட் அணிந்து பைக்கில் வந்த நிலையில், மேற்கு கோதாவரி மாவட்டம் போலவரம் சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

மது கடத்தல்


அப்போது அந்த வழியாக வந்த ராஜேஷ் மற்றும் சீனிவாஸ் ஆகியோரை சந்தேகத்தின் பேரில், சோதனை செய்தனர். ஆனால் எந்தவித தடயங்களும் கிடைக்காத நிலையில், அவர்கள் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். அவர்களின் உடல் தோற்றம் வித்தியாசமாக இருப்பதை பார்த்து, ஆடைகளை கழற்றும் படி போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் ஆடைகளை அகற்றியதும், உடலில் மதுபாட்டில்களை ஒட்டி வைத்திருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆந்திராவில் மது பாட்டில்கள் விலை மற்ற மாநிலங்களை விட இருமடங்காக உள்ளதால், வெளி மாநிலங்களிலிருந்து மதுபாட்டில்களை கடத்தி வருவது அதிகரித்துள்ளது. அதனை தடுப்பதற்காக போலீசாரும் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருவது குறிப்பித்தக்கது.