×

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்குக்கு ரூ.15 ஆயிரம் நிதி – மாநில அரசு அறிவிப்பு!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. இரண்டாம் அலை பரவல் கடந்த இரு வாரங்களாக வட மாநிலங்களில் அதிகமாக இருந்த நிலையில், தற்போது தென்னிந்தியாவில் உக்கிரமாக இருக்கிறது. குறிப்பாக கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கிறது. கொரோனாவால் உயிரிழப்புகளும் படிபடியாக உயர்ந்து வருகிறது. உயிரிழப்புகள் அதிகரிப்பதால் மின் மயானங்களும் இடுகாடுகளும் நிரம்பி வழிகின்றன. இது ஒருபுறம் என்றால் தங்களது அன்புக்குரியவர்களுக்கு
 

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. இரண்டாம் அலை பரவல் கடந்த இரு வாரங்களாக வட மாநிலங்களில் அதிகமாக இருந்த நிலையில், தற்போது தென்னிந்தியாவில் உக்கிரமாக இருக்கிறது. குறிப்பாக கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கிறது. கொரோனாவால் உயிரிழப்புகளும் படிபடியாக உயர்ந்து வருகிறது.

உயிரிழப்புகள் அதிகரிப்பதால் மின் மயானங்களும் இடுகாடுகளும் நிரம்பி வழிகின்றன. இது ஒருபுறம் என்றால் தங்களது அன்புக்குரியவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்ய பணம் இல்லாமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். அனைத்து பணமும் அவர்களின் உயிர்களைக் காப்பாற்றவே செலவு செய்யப்படுவதால் இந்த நிலை ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர். இதனால் உயிரிழந்தவர்களை நிம்மதியாக நல்லடக்கம் செய்ய முடியாதது ரண வேதனையாக இருப்பதாக அழுகின்றனர்.

மக்களின் வேதனையைப் போக்க உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்கு செய்ய அவர்களின் குடும்பத்தாருக்கு அரசு சார்பில் ரூ.15 ஆயிரம் வழங்கப்படும் என்று ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். கடந்த ஆண்டே இந்தத் திட்டத்தை அவர் அறிவித்திருந்தார். தற்போது அதனை மீண்டும் தொடங்கியிருக்கிறார். இதற்கான நிதியை கொரோனா தடுப்பு நிதியிலிருந்து எடுத்துக்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 101 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.