×

மருகனுக்கு 158 ரக உணவுகளுடன் விருந்து வைத்து அசத்திய மாமியார்!
 

 

குண்டூரில் சங்கராந்தி பண்டிகைக்கு வீட்டிற்கு வந்த மருமகனுக்கு 158 ரகமான உணவுகளுடன் விருந்து வைத்த மாமியார் வீட்டாரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டங்களில் புது மருமகன்களுக்கு விருந்து வைப்பது ஒரு பாரம்பரியம். ஆனால் இந்த முறை குண்டூர் மாவட்டத்தின் தெனாலியைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் அந்த பாரம்பரியத்தை கடைப்பிடித்து முதல் சங்கராந்திக்கு வந்த தங்கள் மருமகனுக்கு 158 வகையான உணவுகளுடன் விருந்து தயாரித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினர்.  இந்த சங்கராந்தி பண்டிகைக்கு, குண்டூர் மாவட்டத்தின் தெனாலியைச் முரளி கிருஷ்ணா தம்பதியினர்   தங்கள் மகள் மௌனிகாவை ராஜமுந்திரியில் வசிக்கும் ஸ்ரீதத்தாவுக்கு கடந்த ஆண்டு திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்குப் பிறகு வரும் முதல் சங்கராந்தி பண்டிகையின் போது, ​​கோதாவரி மாவட்ட மக்களுக்கு குறைந்தவர்கள் இல்லை என்னும் வகையில் 158 வகையான இனிப்பு, காரம் என பல்வேறு உணவுகளுடன் விருந்து தயாரித்து பரிமாறினர்.  இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.