×

திரைப்பட டிக்கெட்டுகளை ஆன்லைனில் அரசே விற்கும் சட்டமசோதா அமல்!

 

திரைப்பட டிக்கெட்டுகளை ஆன்லைனில் அரசே விற்பனை செய்யும்  திருத்தப்பட்ட திரைப்பட சட்ட மசோதா ஆந்திர மாநில சட்டப்பேரவையில் அமல்படுத்தப்படுத்தப்பட்டது.

ஆந்திர மாநில அரசு சமீபத்தில் சினிமா தியேட்டர் கட்டணங்களை ஒழுங்குபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதில் ஒவ்வொரு மாநகரம், நகரம், கிராமம் என டிக்கெட் கட்டணங்களுக்கு குறைந்தபட்ச, அதிகபட்ச கட்டணங்களை நிர்ணயித்தது. இதனால் பெரிய பட்ஜெட் படங்கள் பெரும் சிக்கலை சந்திக்க நேரிடும். 

இந்நிலையில் ஆந்திரப் மாநில திரைப்பட  ஒழுங்குமுறை திருத்தச் சட்டம் 2021ஐ  செய்தி, திரைப்படம் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் பேர்னி நானி பேரவை ஒப்புதலுக்கு கொண்டு வந்தார். அப்போது பேசிய அமைச்சர் நானி, “திரைப்பட டிக்கட்டுகளை ஃபிலிம் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் மூலமாக பொதுமக்களுக்கு ஆர்பிஐ கேட்வே மூலம் ஆன்லைனில் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த டிக்கெட்டுகள் விற்பனை மூலம் வரக்கூடிய பணம் அரசு வைத்துக்கொண்டு ஒரு மாதம் இரண்டு மாதம் கழித்து வழங்கும் என்ற குற்றசாட்டுகள் கூறப்படுகிறது. அவ்வாறு இருக்காது  ஃபிலிம் டெவலப்மெண்ட்
கார்ப்பரேஷன் டிக்கெட் விற்பனை மட்டும் ஆன்லைனில் செய்யும் பண பரிவர்த்தனை செய்யப்பட்ட பிறகு அந்தந்த தியேட்டர் உரிமையாளர்களுக்கு பணம் நேரடியாக சென்று விடும். அதனால் வெளிப்படைத்தன்மையுடன் டிக்கெட் விற்பனை செய்யப் படுவதோடு, பொதுமக்களும் டிக்கெட் பெற்ற பிறகு சினிமா தியேட்டருக்கு செல்லக்கூடிய மனத் திருப்தி ஏற்படும். வரி ஏய்ப்பு செய்யப்படுவதும் தடுக்கப்படும். 
திரைப்பட உரிமையாளர்கள் தாங்கள் வைத்ததே சட்டம் என பல மடங்கு கட்டணம் வைத்து டிக்கெட் விற்பனை  செய்வதோடு சரியான முறையில் ஜிஎஸ்டி வரி செலுத்தப் படுவதில்லை. நான்கு ஷோக்களுக்கு மட்டுமே அனுமதி உள்ள நிலையில் 6 முதல் 8 ஷோக்கள் இயக்கப்படுகிறது. இதனால் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்யப்படுகிறது அவ்வாறு  செய்யப்படுவதை தடுக்கும் விதமாகவும், பொதுமக்களுக்கு பயன்படும் விதமாக சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.  எனவே இந்த சட்ட மசோதாவை சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஓட்டெடுப்புடன் சபாநாயகர் தம்மினேனி சீத்தாராமால் நிறைவேற்றப்பட்டது” என தெரிவித்தார்.