×

அமுதா ஐ.ஏ.எஸ்க்கு பிரதமர் அலுவலகத்தில் பொறுப்பு

தமிழகத்தின் மிகவும் குறிப்பிடத் தகுந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் முதன்மையானவர் அமுதா ஐ.ஏ.எஸ். தமக்கு அளிக்கப்பட்ட பொறுப்புகளில் முழுமையாகத் தன்னை ஒப்படைத்து நிறைவேற்றுவதில் கட்சி பேதமின்றி, பொதுமக்களின் பாராட்டுகளையும் பெற்றவர் அமுதா ஐ.ஏ.எஸ். அமுதா பிறந்தது மதுரையில்தான். நடுத்தர பொருளாதாரச் சூழல் கொண்ட குடும்பம் அது. சின்ன வயதிலிருந்தே கலெக்டராக வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர். பி.எஸ்.ஸி அக்ரி படித்தவர். சிவில் சர்வீஸ் எக்ஸாம் எழுதும் முயற்சியில் முதன் முறையிலேயே வெற்றிபெற்றவர். சப் கலெக்டர், கலெக்டர், உணவுப் பாதுகாப்பு
 

தமிழகத்தின் மிகவும் குறிப்பிடத் தகுந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் முதன்மையானவர் அமுதா ஐ.ஏ.எஸ். தமக்கு அளிக்கப்பட்ட பொறுப்புகளில் முழுமையாகத் தன்னை ஒப்படைத்து நிறைவேற்றுவதில் கட்சி பேதமின்றி, பொதுமக்களின் பாராட்டுகளையும் பெற்றவர் அமுதா ஐ.ஏ.எஸ்.

அமுதா பிறந்தது மதுரையில்தான். நடுத்தர பொருளாதாரச் சூழல் கொண்ட குடும்பம் அது. சின்ன வயதிலிருந்தே கலெக்டராக வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர். பி.எஸ்.ஸி அக்ரி படித்தவர். சிவில் சர்வீஸ் எக்ஸாம் எழுதும் முயற்சியில் முதன் முறையிலேயே வெற்றிபெற்றவர். சப் கலெக்டர், கலெக்டர், உணவுப் பாதுகாப்பு ஆணையர் என பல்வேறு பொறுப்புகளைச் சுமந்தவர். ஆயினும் எங்கும் தனித்துவமாக கடைமைச் செய்பவர். குறிப்பாக பெண்கள், பெண் குழந்தைகளின் கல்வியில் தனி அக்கறை கொள்பவர்.

செங்கல்பட்டில் இவர் பணியாற்றியபோது மணல் லாரியைப் பிடித்தபோது லாரியை மோதி இவர் மீது தாக்குதல் நடத்தினர். நல்வாய்ப்பாக உயிர்த்தப்பினார்.

முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோரின் இறுதி சடங்குகளை குறைவான நேரத்தில் எவரின் குறை சொல் கேட்க விடாமல் செய்துமுடித்தவர்.

அவருக்கு தற்போது புது தில்லியில் பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் அலுவலக இணைச்செயலளாராகப் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.