×

"தமிழகத்திற்கு 59 எம்பிக்கள் கிடைப்பார்கள்" - அமித்ஷா

 

தொகுதி மறுவரையறையில் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் இருக்காது என மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.

மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதா மீதான விவாதத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, “புதிய தொகுதி மறுவரையறையால் எந்த ஒரு மாநிலத்திற்கும் எந்த இழப்பும் ஏற்படாது. தென் மாநிலங்களுக்குப் பாதிப்பில்லை. தமிழ்நாட்டில் தற்போதுள்ள 39 இடங்களிலிருந்து 20 இடங்கள் கூடுதலாகப் பெற்று மொத்தம் 59 இடங்களாக உயரும். கேரளாவில் 20 இடங்களிலிருந்து 10 இடங்கள் கூடுதலாகப் பெற்று 30 இடங்களாக உயரும். ஆந்திரப் பிரதேசத்தில் 25 இடங்களிலிருந்து 13 இடங்கள் கூடுதலாகப் பெற்று 38 இடங்களாக உயரும். தெலங்கானாவில் 17 இடங்களிலிருந்து 9 இடங்கள் கூடுதலாகப் பெற்று 26 இடங்களாக உயரும். மகாராஷ்டிராவில் உத்தரப் பிரதேசத்திற்கு அடுத்தபடியாக அதிக இடங்களைக் கொண்ட மகாராஷ்டிரா, 24 இடங்களை கூடுதலாகப் பெறும். தொகுதி மறுவரையறையில் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் இருக்காது. தென் மாநிலங்களுக்கு பாதிப்பு என கூறுவது பொய். தமிழகத்தின் பலம் 7.18% இருந்து 7.23% ஆக உயரும்” என்றார்.