×

ரிலையன்ஸ் ரீடெய்லின் 40% பங்குகள் வாங்க அமேசான் பேச்சு? 20 பில்லியன் டாலருக்கு வாங்க உள்ளதாக தகவல்?

ரிலையன்ஸ் ரீடெயல் நிறுவனத்தின் 40 சதவீத பங்குகளை 20 பில்லியன் டாலருக்கு வாங்க அமேசான் நிறுவனம் ரகசிய பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் நுகர்வோர் சந்தையான இந்தியாவில், ஆன்லைன் வர்த்தகம் இன்னும் சிறிய அளவில் தான் நடந்து வருகிறது. பெரும்பாலான மக்கள் தங்களுக்கான பொருட்களை சில்லரை வணிக கடைகளில் தான் வாங்குகின்றனர். இதனால் அமேசான் ரீடெய்ல் வர்த்தகத்தில் கவனத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி, ரிலையன்ஸ்
 

ரிலையன்ஸ் ரீடெயல் நிறுவனத்தின் 40 சதவீத பங்குகளை 20 பில்லியன் டாலருக்கு வாங்க அமேசான் நிறுவனம் ரகசிய பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் நுகர்வோர் சந்தையான இந்தியாவில், ஆன்லைன் வர்த்தகம் இன்னும் சிறிய அளவில் தான் நடந்து வருகிறது. பெரும்பாலான மக்கள் தங்களுக்கான பொருட்களை சில்லரை வணிக கடைகளில் தான் வாங்குகின்றனர். இதனால் அமேசான் ரீடெய்ல் வர்த்தகத்தில் கவனத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி, ரிலையன்ஸ் ரீடெய்ல மூலம் இந்தியாவில் தனது தளத்தை இன்னும் பலமாக அமைக்க திட்டமிட்டுள்ளது.

FILE PHOTO: The logo of Amazon is seen at the company logistics center in Boves, France, November 5, 2019. REUTERS/Pascal Rossignol/File Photo

இதற்காக ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் பங்குகளை வாங்க அந்நிறுவனம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ரிலையன்ஸ் நிறுவனமும் தனது ரீடெய்ல் நிறுவனத்தின் 40 சதவீத பங்குகளை விற்க தயாராக இருப்பதாக கூறப்படும் நிலையில் 2 ஆயிரம் கோடி டாலருக்கு இந்த பங்குகளை வாங்குவது தொடர்பான பேச்சுவார்த்தை ரகசியமாக நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமையும் பட்சத்தில், இந்தியாவில் ஏற்படும் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தமாக இருக்கும் என கூறப்படுகிறது.

எஸ். முத்துக்குமார்