×

கொரோனா எதிரொலி: அமர்நாத் புனித யாத்திரை ரத்து!

கொரோனா பரவல் எதிரொலியால் அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் கடல் மட்டத்திலிருந்து 3,880 மீட்டர் உயரத்தில் இமயமலையில் அமர்நாத் குகை கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பக்தர்கள் அமர்நாத் யாத்திரை மேற்கொள்வார்கள். ஜம்மு – காஷ்மீர் பாதல்காம், அனந்த்நாக்கில் பனிலிங்கத்தை மே முதல் ஆகஸ்ட் வரை தரிசிப்பது வழக்கம். கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் காரணமாக இந்த முறை யாத்திரையின் நாட்களை 15 நாட்களாக குறைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக ஸ்ரீ அமர்நாத்ஜி ஆலய அதிகாரிகள்
 

கொரோனா பரவல் எதிரொலியால் அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் கடல் மட்டத்திலிருந்து 3,880 மீட்டர் உயரத்தில் இமயமலையில் அமர்நாத் குகை கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பக்தர்கள் அமர்நாத் யாத்திரை மேற்கொள்வார்கள். ஜம்மு – காஷ்மீர் பாதல்காம், அனந்த்நாக்கில் பனிலிங்கத்தை மே முதல் ஆகஸ்ட் வரை தரிசிப்பது வழக்கம். கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் காரணமாக இந்த முறை யாத்திரையின் நாட்களை 15 நாட்களாக குறைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக ஸ்ரீ அமர்நாத்ஜி ஆலய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் எதிரொலியால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு திருவிழாக்கள், போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருப்பதால் அமர்நாத் யாத்திரையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.