×

அயோத்தியில் பயங்கரவாத தாக்குதல்… பாக். ஐ.எஸ்.ஐ சதித் திட்டம்!

அயோத்தியில் வருகிற 5ம் தேதி நடைபெற உள்ள ராமர் கோவில் கட்டுமானப் பணியைத் தடுத்து நிறுத்த ஐஎஸ்ஐ பயங்கர சதித் திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை தகவல் கிடைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது வருகிற ஆகஸ்ட் 5ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் தொடங்குகின்றன. பிரதமர் மோடி பங்கேற்று கட்டுமானப் பணியைத் தொடங்கி வைக்கிறார். ஆகஸ்ட் 5 என்பது காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட நாளும் கூட. எனவே, அன்றைய தினத்தில் இந்தியாவில் தாக்குதல் நடத்த
 

அயோத்தியில் வருகிற 5ம் தேதி நடைபெற உள்ள ராமர் கோவில் கட்டுமானப் பணியைத் தடுத்து நிறுத்த ஐஎஸ்ஐ பயங்கர சதித் திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை தகவல் கிடைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
வருகிற ஆகஸ்ட் 5ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணிகள்

தொடங்குகின்றன. பிரதமர் மோடி பங்கேற்று கட்டுமானப் பணியைத் தொடங்கி வைக்கிறார். ஆகஸ்ட் 5 என்பது காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட நாளும் கூட. எனவே, அன்றைய தினத்தில் இந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளுடன் இணைந்து பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ சதித் திட்டம் தீட்டி உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.


கட்டுமானப் பணி தொடங்குவதற்கு முன்பு அல்லது ஆகஸ்ட் 15ம் தேதி தாக்குதல் நடத்தத் திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக உளவுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சார்ந்தவர்களுக்கு இதற்காக பயிற்சி வழங்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஐந்து குழுக்களாக பிரிக்கப்பட்டு இந்தியாவுக்குள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் உள்நாட்டு கலவரம் போன்று இவர்கள் இதை செயல்படுத்துவார்கள் என்றும் ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனால் அயோத்தி, காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு பலப்படுத்த உத்தரவிடப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.