இந்திய வரைபடத்தை மிதித்த அக்ஷய்குமார்- வலுக்கும் கண்டனம்
இந்திய வரைபடத்தை மிதித்ததாக பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய்குமாருக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருகின்றன. ஆனால் அவர் இதுவரைக்கு அதுகுறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் இம்ரான் காஷ்மியுடன் இணைந்து நடித்திருக்கும் செல்பி திரைப்படம் வரும் 24ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் அக்ஷய்குமார் வடக்கு அமெரிக்காவில் மார்ச் மாதம் சுற்றுலா செல்வதாக செல்வதற்காக எடுக்கப்பட்ட விளம்பர வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.
19 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில் அக்ஷய்குமார் உடன் திசா பதாணி, நோரா பிரதேகி, மௌனி ராய், சோணம் பசுவா உள்ளிட்டவரும் உள்ளனர். வீடியோவில் நடிகர்கள் அனைவரும் பூமிப்பந்தில் நடப்பது போன்று உள்ளது. பூமிப்பந்து சுழல நடிகர்கள் நடக்கிறார்கள். மற்ற நடிகர்கள் பிற நாடுகளின் வரைபடங்கள் மீது காலடி எடுத்து வைக்கும் நிலையில் , அக்ஷய்குமார் இந்திய வரைபடத்தில் நடக்கிறார் . இந்த வீடியோ வெளியான நிலையில் சமூக வலைத்தளங்களில் அக்ஷய குமாருக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்துள்ளன .
இந்திய வரைபடத்தை அவமதித்துவிட்டார் என்று குற்றம் சாட்டி வருகின்றனர் . அக்ஷய் குமாரின் கனடா குடி உரிமை வைத்து ட்ரோல்கள் செய்து வருகின்றார்கள். உலகின் மற்ற நாடுகளில் வரைபடத்தில் மற்ற பிரபலங்கள் காலடி எடுத்து வைக்கும் போது அக்ஷய் குமார் இந்திய வரைபடத்தில் அடி எடுத்து வைக்கிறார். அவர் இந்திய வரைபடத்தில் நடப்பதால் அவமதிப்பதாக அக்ஷய்குமார் எதிராக கண்டனங்கள் வலுத்து வருகின்றனஅக்சய் குமாருக்கு எதிரான விமர்சனங்கள் இப்படி வலுத்து வரும் நிலையில் இது குறித்து அவர் இதுவரைக்கும் எந்த பதிலும் சொல்லவில்லை.