×

பிரபல நடிகை தற்கொலை! ரசிகர்கள் அதிர்ச்சி

 

உத்திர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள விடுதியில் நடிகை அகன்ஷா துபே தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போஜ்புரி திரைப்பட நடிகை அகன்ஷா துபே. 'வீரோன் கே வீர்' மற்றும் 'கசம் பத்னா கே வாலே கி 2' போன்ற படங்களில் நடித்துள்ளார். அவருக்கு வயது 25. இன்ஸ்டாகிராமில் எப்பவும் ஆக்டிவாக இருக்கும் அகன்ஷா, அடிக்கடி ரீல்ஸ் பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பது வழக்கம். சிறு வயது முதலே நடனம், நடிப்பில் ஆர்வம் காட்டிவரும் அகன்ஷா, மும்பையில் தனது பள்ளி படிப்பை முடித்தார். இவரை ஐஏஎஸ் ஆக்க வேண்டும் என்பது அவரது பெற்றோரின் விருப்பம். 

பதோஹியில் வசிக்கும் இவர், படப்பிடிப்புக்காக வாரணாசி சென்றிருந்தார். இன்று, சாரநாத்தில் உள்ள ஹோட்டலில்  தூக்கில் துங்கிய நிலையில் இறந்து கிடந்தார். நேற்று இரவு இன்ஸ்டாகிராமில் நடனமாடும் வீடியோவை பதிவிட்ட அகன்ஷா துபே, இன்று மரணமடைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியாத நிலையில், அவரது சடலத்தை கைப்பற்றி வாரணாசி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.