×

”மார்ச் 23 – மே 23 வரை விமான கட்டணம் திருப்பி அளிக்கப்படும்”சுப்ரீம் கோர்டில் விமான போக்குவரத்து இயக்குனரகம் தகவல்

கடந்த மார்ச் 23ம் தேதி முதல் மே 23 வரை உள்நாடு மற்றும் சர்வதேச விமான டிக்கெட் புக்கிங் செய்த அனைவருக்கும் கட்டண தொகை முழுமையாக திருப்பி அளிக்கப்படும் என விமான போக்குவரத்து இயக்குனரகம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஊரடங்கு சமயத்தில் டிக்கெட் கட்டணத்தை பயணிகளுக்கு திருப்பி அளிப்பது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அது குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து மார்ச் 23ம் தேதி முதல் மே 23ம் தேதி வரை
 

கடந்த மார்ச் 23ம் தேதி முதல் மே 23 வரை உள்நாடு மற்றும் சர்வதேச விமான டிக்கெட் புக்கிங் செய்த அனைவருக்கும் கட்டண தொகை முழுமையாக திருப்பி அளிக்கப்படும் என விமான போக்குவரத்து இயக்குனரகம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஊரடங்கு சமயத்தில் டிக்கெட் கட்டணத்தை பயணிகளுக்கு திருப்பி அளிப்பது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அது குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது.

இதையடுத்து மார்ச் 23ம் தேதி முதல் மே 23ம் தேதி வரை உள்நாடு மற்றும் சர்வதேச விமானங்களுக்கான டிக்கெட் புக்கிங் செய்தவர்களுக்கு முழு கட்டண தொகையும் திருப்பி அளிக்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

மேலும், குறிப்பிட்ட காலத்திற்குண்டான டிக்கெட் பணத்தை விமான நிறுவனங்கள் திருப்பி அளிக்காவிட்டால், அது விதிமீறலாக கருதி, அந்நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அது தெரிவித்துள்ளது.

எஸ். முத்துக்குமார்.