ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இடைக்கால நிவாரணம்..!
Jun 16, 2025, 06:30 IST
ஏர் இந்தியா எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எங்கள் நிறுவனம் ஆதரவாக இருக்கும். இந்த கடினமான தருணத்தில் அவர்களுக்கு தேவையான ஆதரவை வழங்க எங்கள் நிறுவனம் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது.
விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் உயிர் தப்பியவர்களுக்கு உடனடி தேவையை சமாளிப்பதற்காக ரூ.25 லட்சம் இடைக்கால நிவாரணமாக வழங்கப்படும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என ஏற்கெனவே அறிவித்திருந்தோம். அதனுடன் கூடுதலாக இந்த தொகை வழங்கப்படும்” என கூறப்பட்டுள்ளது.