×

“அந்த ரெண்டு பேரால அறுநூறு பேர் கொரானா அச்சத்தில் .. “-கேரளா விமான விபத்தில் சிக்கியவர்களை மீட்க போன 600 பேர் தனிமைப்படுத்தப்பட்டார்கள்.

விபத்தில் சிக்கிய கோழிக்கோடு விமானத்தில் பயணித்த 190 பயணிகளுக்கு கொரானா பரிசோதனை செய்யப்பட்டதில் இரண்டு பேருக்கு பாசிட்டிவ் முடிவு வந்துள்ளதால், அங்கு மீட்பு பணியிலிருந்த 600 பேர் கொரானா அச்சத்தில் உள்ளார்கள் . கடந்த வெள்ளிக்கிழமை நடந்த கோழிக்கோடு விமான விபத்தில் சிக்கியவர்களை மீட்க சனிக்கிழமையன்று மீட்பு நடவடிக்கைக்காக கிட்ட தட்ட 600 பேர் ஈடுபட்டிருந்தனர் .அதில் மலப்புரம் கலெக்டர் கோபாலகிருஷ்னன் மற்றும் சிஐஎஸ்எஃப் வீரர்கள் 50 பேர் உள்பட பலர் களத்தில் இருந்தனர் . அந்த
 

விபத்தில் சிக்கிய கோழிக்கோடு விமானத்தில் பயணித்த 190 பயணிகளுக்கு கொரானா பரிசோதனை செய்யப்பட்டதில் இரண்டு பேருக்கு பாசிட்டிவ் முடிவு வந்துள்ளதால், அங்கு மீட்பு பணியிலிருந்த 600 பேர் கொரானா அச்சத்தில் உள்ளார்கள் .

கடந்த வெள்ளிக்கிழமை நடந்த கோழிக்கோடு விமான விபத்தில் சிக்கியவர்களை மீட்க சனிக்கிழமையன்று மீட்பு நடவடிக்கைக்காக கிட்ட தட்ட 600 பேர் ஈடுபட்டிருந்தனர் .அதில் மலப்புரம் கலெக்டர் கோபாலகிருஷ்னன் மற்றும் சிஐஎஸ்எஃப் வீரர்கள் 50 பேர் உள்பட பலர் களத்தில் இருந்தனர் . அந்த விமான விபத்தில் 18பேர் உயிரிழந்த நிலையில் ,அதில் வந்த பயணிகளை கொரானா பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அதில் இரண்டு பேருக்கு கொரானா இருப்பது உறுதியானது .இதனால் மாவட்ட நிர்வாகம் அந்த மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 600 பேருக்கும் கொரானா பரிசோதனை நடத்தவுள்ள நிலையில் ,இப்போதைக்கு அவர்களை தனிப்படுத்திக்கொள்ள கூறப்பட்டுள்ளது .
ஏனெனில் கடந்த சில நாட்களாக கேரளா மாநிலத்தில் வைரஸ்தொற்று அதி வேகமாக பரவி வருகிறது .கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை 34000 பேருக்கு மேற்ப்பட்டவர்கள் இந்த தொற்றுக்கு உள்ளாகி,108பேர் இறந்துள்ள நிலையில் கேரளா அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இப்படி அவர்களை தணிமைப்படுத்திக்கொள்ள கூறியுள்ளது .இதனால் அந்த கோழிக்கோடு விமானவிபத்துக்கு மீட்பு நடவடிக்கைக்கு சென்ற பாதுகாப்பு வீரர்கள் மற்றும் அவரின் குடும்பத்தினர் கொரானா அச்சத்தில் உள்ளார்கள் .