×

நெட் பேங்கிங் சேவை வழங்காததால் வங்கி கணினி சி.பி.யூ சாதனத்தை அபேஸ் செய்த நபர்

அகமதாபாத்: நெட் பேங்கிங் சேவை வழங்காததால் வங்கி கணினியின் சி.பி.யூ சாதனத்தை ஒரு நபர் தூக்கிச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. அகமதாபாத்தில் உள்ள பேங்க் ஆஃப் பரோடாவின் மக்பரா கிளையில் உள்ள வங்கியின் கணினி சி.பி.யூ சாதனத்தை சுஜய் ஷா என்ற நகை வியாபாரி தூக்கிக் கொண்டு ஓடி விட்டார். அந்த வங்கிக் கிளை தனக்கு நெட் பேங்கிங் சேவைகளை வழங்காத காரணத்தால் அவர் அந்த சாதனத்தை தூக்கிக் கொண்டு ஓடி விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த
 

அகமதாபாத்: நெட் பேங்கிங் சேவை வழங்காததால் வங்கி கணினியின் சி.பி.யூ சாதனத்தை ஒரு நபர் தூக்கிச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அகமதாபாத்தில் உள்ள பேங்க் ஆஃப் பரோடாவின் மக்பரா கிளையில் உள்ள வங்கியின் கணினி சி.பி.யூ சாதனத்தை சுஜய் ஷா என்ற நகை வியாபாரி தூக்கிக் கொண்டு ஓடி விட்டார். அந்த வங்கிக் கிளை  தனக்கு நெட் பேங்கிங் சேவைகளை வழங்காத காரணத்தால் அவர் அந்த சாதனத்தை தூக்கிக் கொண்டு ஓடி விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த வங்கியின் மேலாளர் ஆனந்தநகர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

“சுஜய் ஷா வங்கிக்கு வந்து ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தார். நான் அவருடன் பேச என் அலுவலகத்திலிருந்து வெளியே வந்தேன். அவர் நெட் பேங்கிங் சேவைகளுக்கு விண்ணப்பித்ததாகவும், ஆனால் இன்னும் தனக்கு அது இன்னும் கிடைக்கவில்லை என்றும் என்னிடம் கூறினார். ஆனால் அவரது நெட்பேங்கிங் சேவை ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளது” என்று மக்பரா வங்கிக் கிளை மேலாளர் வினீத் குருத்தா தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். சுஜய் ஷா எடுத்துச் சென்ற சி.பி.யூ சாதனத்தில் வாடிக்கையாளர்களின் முக்கியமான விவரங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.