×

6 வயது சிறுவனின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான முழு செலவையும் ஏற்ற நடிகர் சோனு சூட்

தெலங்கானாவை சேர்ந்த 6 வயது சிறுவன் ஹர்ஷ்வர்தனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான முழு செலவையும் நடிகர் சோனு சூட் ஏற்றுக் கொண்டுள்ளார். பாலிவுட் நடிகர் சோனு சூட் திரைபடங்களில், வில்லன், காமெடியன் என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்தாலும், நிஜ வாழ்க்கையில் கதாநாயகனாக திகழ்கிறார். லாக்டவுன் சமயத்தில் மகாராஷ்டிராவில் செய்வதறியமால் தவித்து வந்த ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலங்கள் செல்ல பஸ் வசதி உள்பட பல்வேறு உதவிகளை அவர் செய்தார். நெருக்கடியில் சிக்கி தவித்த
 

தெலங்கானாவை சேர்ந்த 6 வயது சிறுவன் ஹர்ஷ்வர்தனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான முழு செலவையும் நடிகர் சோனு சூட் ஏற்றுக் கொண்டுள்ளார்.

பாலிவுட் நடிகர் சோனு சூட் திரைபடங்களில், வில்லன், காமெடியன் என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்தாலும், நிஜ வாழ்க்கையில் கதாநாயகனாக திகழ்கிறார். லாக்டவுன் சமயத்தில் மகாராஷ்டிராவில் செய்வதறியமால் தவித்து வந்த ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலங்கள் செல்ல பஸ் வசதி உள்பட பல்வேறு உதவிகளை அவர் செய்தார். நெருக்கடியில் சிக்கி தவித்த ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தவர்களுக்கு உதவி மக்களின் மனதை வென்றார் சோனு சூட்.

சோனு சூட்

தற்போது தெலங்கானாவை சேர்ந்த 6 வயது சிறுவன் ஹர்ஷ்வர்தனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான முழு தொகையையும் சோனு சூட் கொடுத்துள்ளார். இது குறித்து ஹர்ஷ்வர்தன் தாயார் கூறியதாவது: ஹர்ஷ்வர்தன் தனது 6 மாதம் வயதிலிருந்தே உடல் நலக்குறைவாக இருந்தான். கடந்த ஒரு மாதத்துக்கு முன்புதான் எனது மகனுக்கு கல்லீரல் முழுமையாக சேதமடைந்து விட்டது, அவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கல்லீரல்

அதற்கு சுமார் ரூ.20 லட்சம் செலவாகும் என்றும், சிகிச்சை அளிக்கவில்லையென்றால் அவருக்கு உயிருக்கு ஆபத்து என்றும் தெரிவித்தனர். இதனையடுத்து முதல்வரின் நிதி மற்றும் ஆரோக்கியஸ்ரீ ஆகியவற்றின் வாயிலாக உதவி கேட்டோம் ஆனால் கிடைக்கவில்லை. சோனு சார் படப்பிடிப்பில் பிசியாக இருந்தபோதிலும் அவர் எங்களை சந்தித்தார். முழு சிகிச்சைக்கான பணத்தையும் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்தார். அறுவைக்சிகிச்சைக்கான அனைத்து செலவினத்தையும் ஏற்றுக்கொண்டார். அவர் ஒரு கனிவான ஆத்மா. எங்களது இறுதி மூச்சு இருக்கும்வரை அவரது உதவியை மறக்கமாட்டோம். எதிர்காலத்தின் எங்களை போன்ற பல ஏழை ஆத்மாக்களுக்கு அவர் உதவுவார் என்று நம்புகிறேன் என தெரிவித்தார்.