×

தன் புகைப்படங்களை Deep fake செய்து ஆபாச தளங்களில் வெளியிடுகின்றனர்- சிரஞ்சீவி புகார்

 

தன் புகைப்படங்களை Deep fake வீடியோவாக உருவாக்கி அதனை ஆபாச தளங்களில் சிலர் வெளியிடுவதாக நடிகர் சிரஞ்சீவி போலீசில் புகார் அளித்துள்ளார்.

தெலுங்கு திரைப்பட மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் புகைப்படங்களை  சைபர் குற்றவாளிகள் ஆபாச வீடியோக்களாக மாற்றி சமூக ஊடகங்களில் வைரலாக்கினர். இந்த வீடியோக்கள் சில மணி நேரங்களுக்குள் வைரலானதால், சிரஞ்சீவி உடனடியாக ஹைதராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனரிடம் புகார் அளித்தார். சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். அதில் தனக்கும் தனது குடும்பத்தினருக்கு எதிராக தவறான பிரச்சாரம் மற்றும் தகாத வீடியோக்கள் உருவாக்கப்படுவதாகவும் , மக்களின் மத்தியில் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் டீப்ஃபேக்குகள்  தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துவது கூறினார். 

தனது பெயரில் ஆபாச வீடியோக்களை உருவாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார். சமீபத்தில், சிரஞ்சீவி தனது தனிப்பட்ட உரிமைகளைப் பாதுகாக்க நீதிமன்றத்தை அணுகினார், இதில்  அவரது அனுமதியின்றி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பயன்படுத்தக்கூடாது என்று நீதிமன்றம்  உத்தரவுகளைப் பிறப்பித்தது. இருப்பினும், இந்தத் தீர்ப்பை மீறி, டீப்ஃபேக்குகளின் வீடியோ  நிற்கவில்லை. ஏற்கனவே திரைப்பட உலகையே அதிர வைக்கும் ஐ போம்மா, பாப்பம் டிவி மற்றும் தமிழ் ராக்கர்ஸ் போன்ற வலைத்தளங்கள் வெளிநாட்டு ஐபி முகவரிகளுடன் தொடர்ந்து செயல்படுவதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் அதிகாரிகள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். சிரஞ்சீவியின் 'மன சங்கர வர பிரசாத்' திரைப்படம் சங்கராந்தியின் போது வெளியாக உள்ள நிலையில்  நாகார்ஜுனாவின் 100வது படமான 'லாட்டரி கிங்' படத்தில் சிரஞ்சீவி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் சிரஞ்சீவி டீப்ஃபேக் வீடியோ விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.