×

"பாஜக என்னை கட்சியில் சேருமாறு மிரட்டுகிறது"- அப்ஜித் தீப்கே பரபரப்பு பேட்டி 

 

டெல்லி போராட்டத்தின்போது பாஜகவில் சேருமாறு அழைப்பு வந்ததாகவும், மறுத்ததால் தனக்கும் தன் பெற்றோருக்கும் மிரட்டல் விடுப்பதாகவும் சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே குற்றஞ்சாட்டியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே, “பாஜக என்னை கட்சியில் சேருமாறு மிரட்டுகிறது. நான் ஒருபோதும் பாஜகவில் சேர மாட்டேன்,டெல்லி போராட்டத்தின்போது பாஜகவில் சேருமாறு அழைப்பு வந்தது, பாஜகவில் இணையுங்கள், உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். என்றனர். நான் மறுத்ததால் எனக்கும் என் பெற்றோருக்கும் மிரட்டல் விடுகின்றனர். 30 வயது இளைஞனான எனக்கு எத்தனை மிரட்டல் விடுப்பீர்கள்?  எத்தனை ஆஃபர்கள் கொடுத்தாலும் பாஜகவில் இணைய மாட்டேன்” என்றார்.

தற்போதைய அரசியல் விவாதங்களுக்கு மத்தியில் இந்தக் குற்றச்சாட்டு கவனத்தை ஈர்த்துள்ளது. தீப்கேவின் கூற்றுக்களுக்கு பாஜக தரப்பிலிருந்து உடனடியாக எந்த பதிலும் வரவில்லை.