×

“பாலியல் தொல்லைக்கு ஆளானேன்” : நடிகர் அமீர்கானின் மகள் வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டதாக நடிகர் அமீர்கானின் மகள் ஐரா தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் நடிகர் அமீர்கான் -அவரது முதல் மனைவி ரீனா தத்தாவின் மகள் 23 வயதான ஐரா கான். இவர் கடந்த 4 ஆண்டுகளாக மன அழுத்தத்தில் இருந்ததாக இணையத்தில் வீடியோ வெளியிட்டார். அதில், “நான் 14 வயதாக இருந்தபோது பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டேன். அந்த நபர்கள் எனக்கு தெரிந்தவர்கள் தான். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அவர்களுக்கு தெரிகிறதா இல்லையா என்று எனக்கு
 

பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டதாக நடிகர் அமீர்கானின் மகள் ஐரா தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் நடிகர் அமீர்கான் -அவரது முதல் மனைவி ரீனா தத்தாவின் மகள் 23 வயதான ஐரா கான். இவர் கடந்த 4 ஆண்டுகளாக மன அழுத்தத்தில் இருந்ததாக இணையத்தில் வீடியோ வெளியிட்டார். அதில், “நான் 14 வயதாக இருந்தபோது பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டேன். அந்த நபர்கள் எனக்கு தெரிந்தவர்கள் தான். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அவர்களுக்கு தெரிகிறதா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை.

அது தினமும் நடக்கவில்லை. ஆனால் அவர்கள் செய்தது தவறு என்பதை ஓராண்டுக்கு பிறகே உணர்ந்தேன். இதுகுறித்து எனது பெற்றோருக்கு இமெயில் அனுப்பினேன். அந்த சூழலில் இருந்து வெளியேறினேன் . இனி எனக்கு அவவறு நடக்காது; நடக்கவும் விடமாட்டேன் என்று முடிவு செய்தேன்.

என் பெற்றோர் சிறுவயதிலேயே பிரிந்து விட்டனர். அவர்கள் விவாகரத்து பெற்றது என்னை பாதிக்கவில்லை. அவர்கள் இருவரும் ஒன்றாக பேசி சுமுகமாக பிரிந்ததால் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. நாங்கள் இன்னும் நட்பாகவே இருக்கிறோம். பெற்றோர் விவாகரத்து பெற்றால் நம் வாழ்க்கை பாதிக்கும். ஆனால் எங்கள் வாழ்க்கையில் அவ்வாறு நடக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

நடிகர் அமீர்கானும், அவரது முதல் மனைவி ரீனா தத்தாவும் கடந்த 2002-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றது குறிப்பிடத்தக்கது.