☰
×

லிவ்- இன் உறவில் இருந்துவிட்டு டாட்டா காட்டிய காதலன்... போலீசில் கதறும் இளம்பெண்

 

கேரளாவில் லிவ்- இன் உறவில் இருந்துவிட்டு திருமணத்திற்கு மறுத்த காதலன் தலைமறைவான நிலையில், காதலனைதேடி தரும்படி, இளம்பெண் ஒருவர் போலீசை நாடியுள்ளார்.


காசர்கோட்டைச் சேர்ந்த நிஷ்மாவும், ஹாசன் மாவட்டம், சன்னராயப்பட்டணா தாலுக்காவில் உள்ள கல்லேசோமஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த சூர்யாவும் பெங்களூரில் ஒன்றாக பணி புரிந்துள்ளனர். அப்போது இருவரும் சந்தித்துள்ளனர். அவர்களின் நட்பு படிப்படியாக காதலாக மலர்ந்தது. இந்த ஜோடி கடந்த ஆறு மாதங்களாக பெங்களூரில் ஒரே அறையில் ஒன்றாக வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. திருமணம் செய்துகொள்வோம் என்ற நம்பிக்கையில் அவர்கள் ஒன்றாக வாழ முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. சூர்யாவின் பெற்றோருக்கு இவர்களது காதல் விவகாரம் பற்றி தெரியவந்த நிலையில், ஆரம்பத்தில் திருமணத்திற்குச் சம்மதித்ததாகவும், பின்னர் நிஷ்மாவின் சாதியைப் பற்றி அறிந்த பிறகு அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, இந்தத் திருமணத்தை ஏற்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

தனது குடும்பத்தினரின் எதிர்ப்பைத் தொடர்ந்து, சூர்யா தனது குடும்பத்தினர் திருமணத்திற்குச் சம்மதிக்க மாட்டார்கள் என்று கூறி, செப்டம்பர் 24 அன்று தனது கைபேசியை பெங்களூருவில் உள்ள வீட்டில் வைத்துவிட்டுத் தலைமறைவானதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நிஷ்மா, மகாலட்சுமி லேஅவுட் காவல் நிலையத்தை அணுகி புகார் அளித்துள்ளார். “நான் வியாழக்கிழமை வரை காத்திருப்பேன். அவர் திரும்பி வராவிட்டால், நான் இந்த உலகில் இருக்க மாட்டேன்,” என்றும் நிஷ்மா கூறியதாகத் தெரிகிறது. புகாரை பெற்றுகொண்ட போலீசார், சூர்யாவை தேடி வருகின்றனர்.