×

கஞ்சா போதையில் 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த இளைஞர்!

 

கஞ்சா போதையில் ஏழு வயது சிறுமியை பாலியியல் பலாத்காரம் செய்து தண்ணீர் டிரம்ம அழுத்தி கொலை செய்த இளைஞரை போலீசார் சடலமாக மீட்டனர்.

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் மதனப்பள்ளியில்  உள்ள நீருகட்டுவாரிப்பள்ளியைச் சேர்ந்த  கைத்தறி தொழிலாளி கோபிநாத்தின் மகள் ரிஷிகா பிரியா (07). இவர் ஒரு தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். மகாசிவராத்திரியை முன்னிட்டு பள்ளி விடுமுறை என்பதால் திங்கள்கிழமை மாலை வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது கஞ்சா மற்றும் மதுவுக்கு அடிமையான குல்வர்தன் (30), அவர்களது எதிர் வீட்டிற்கு வெளியே அமர்ந்திருந்தார். ஏற்கனவே போதையில் இருந்த அவர்,ரிஷிகாவை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். மாலையில் சிறுமி வீடு திரும்பாததால், பதற்றமடைந்த பெற்றோர் அப்பகுதியில் தேடியும், கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால் முதலாவது நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

அதற்குள் குல்வர்தன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து அவர் வீட்டில் இருந்த தண்ணீர் டிரம்மில் உடலை வைத்து மூடி வைத்து குடிபோதையில் இருந்தார். செவ்வாய்க்கிழமை காலை, போலீசார் அந்த பகுதியை மோப்ப நாய் கொண்டு சோதனை செய்தனர். அப்போது மோப்ப நாய் குல்வர்தனின் வீட்டின் முன்  நின்றதால் ​​சந்தேகமடைந்த போலீசார் அவரது வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டபோது சிறுமியின் உடலை டிரம்மில் கைப்பற்றினர். தலைமறைவான குல்வர்தமை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் தகவல் அறிந்த நெசவாளர்கள் அவரது  சாதி மற்றும் பொது அமைப்புகள், அரசியல் தலைவர்கள் மற்றும் மகளிர் சங்கத்தினர்  சம்பவ இடத்திற்கு வந்தனர். உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்ல இருந்த  போலீசாரை அவர்கள் சுற்றி வளைத்தனர். குற்றம் சாட்டப்பட்டவரை பிடித்து தங்களிடம் ஒப்படைக்கும் வரை இறந்த சிறுமியின் உடலை ஒப்படைக்க மாட்டோம் என்று  கூறினர். சிறுமியுடன் சேர்ந்து குற்றவாளியை தகனம் செய்து பொது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று அவர்கள் கோரினர். 

போராட்டக்காரர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்ததால், நீருகட்டுவரிப்பள்ளி மற்றும் கட்லடவரிப்பள்ளி சாலைகளில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கடப்பா எஸ்பி நிகாசித் விஸ்வநாத், துணை கலெக்டர் சல்லா கல்யாணி, தெலுங்கு தேச கட்சி இளைஞர் அணி மாநிலத் தலைவர் ஜி. ஸ்ரீராம்சினாபாபு மற்றும் பலர் சிறுமியின் பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். உள்துறை அமைச்சர் அனிதா மற்றும் அமைச்சர் லோகேஷ் ஆகியோர் தொலைபேசியில் நீதி நிலைநாட்டப்படும் என்றும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்ததை அடுத்து போராட்டக்காரர்கள் அமைதியடைந்தனர். பின்னர் மாவட்ட மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்குப் பிறகு உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் தண்ணீர் டிரம்மில் அமுக்கி கொலை செய்துள்ளதாக  பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்ததாக டிஐஜி கோயா பிரவீன் தெரிவித்தார். இந்தநிலையில் காசானிவாரிப்பள்ளி பள்ளி ஏரியில் ஒரு சடலம் மிதப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் முதிவேடு போலீசார் சென்று சடலத்தை கைப்பற்றி பார்த்தப்போது அது சிறுமியை பாலியியல் வன்கொடுமை செய்து கொலை செய்த  குல்வர்தன் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  குல்வர்தன் சிறுமியை கொலை செய்த பிறகு கிராமத்தில் ஏற்பட்ட பதற்றத்தை பார்த்து தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம என போலீசார் தெரிவித்துள்ளனர்.