×

அதிவேகமாக பரவும் ஒமிக்ரான் தொற்று :  சுகாதாரத்துறையின் அதிர்ச்சி ரிப்போர்ட்!!

 

இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  3,071 ஆக பதிவாகியுள்ளது.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை 1,41,986  ஆக உயர்ந்துள்ளது. நேற்று தொற்று எண்ணிக்கை 1,17,100 ஆக பதிவான நிலையில் தினசரி கொரோனா பாதிப்பு கிட்டத்தட்ட ஒன்றரை லட்சத்தை நெருங்கியுள்ளது. இதுவொருபுறமிருக்க இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. 

இந்நிலையில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் 3,071ஆக உயர்ந்துள்ளது நேற்று தொற்று எண்ணிக்கை 3007 ஆக இருந்த நிலையில் இன்று பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 876 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 513 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தமிழ்நாட்டில் 121  ,குஜராத்தில் 204, கேரளாவில் 284   , ராஜஸ்தானில் 291 , தெலுங்கானாவில் 123 என மொத்தம் 3,071  பேருக்கு தொற்று  இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.   இருப்பினும் இதுவரை 1,203 பேர் தொற்றிலிருந்து குணமாகியுள்ளனர்.

கர்நாடகாவில் 333 பேர்,  ஹரியானாவில் 114 பேர், ஒடிசாவில் 60 பேர், உத்தர பிரதேசத்தில்  31 பேர், ஆந்திராவில் 28 பேர், மேற்கு வங்கத்தில் 27 பேர் , கோவாவில் 19 பேருக்கும், அசாமில் 9 பேருக்கும், மத்திய பிரதேசத்தில் 9 பேருக்கும், உத்தரகாண்டில் 8 பேருக்கும், மேகாலயாவில் 4 பேருக்கும் என மொத்தம் 27 மாநிலங்களில் தொற்று பரவல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதேசமயம் மகாராஷ்டிராவில் இதுவரை 381 பேரும், டெல்லியில் 57 பேரும்  குணமாகியுள்ளனர்.