×

பாக்கி ரூ.8 லட்சத்தை கட்டாததால் இறந்த நோயாளியின் உடலை கொடுக்க மறுத்த தானே தனியார் மருத்துவமனை…

மகாராஷ்டிராவில் தனியார் மருத்துவமனை ஒன்று, பாக்கி ரூ.8 லட்சத்தை கட்டாததால் இறந்த நோயாளியின் உடலை கொடுக்க மறுத்துள்ளது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலான பிறகு உடலை அந்த மருத்துவமனை கொடுத்துள்ளது. மகாராஷ்டிராவில் தானே மாவட்டத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் ஒன்றில் கடந்த ஆகஸ்ட் 17ம் தேதியன்று உடல் நலக்குறை காரணமாக பெண் ஒருவரை அவரது கணவர் சேர்த்துள்ளார். அவருக்கு அந்த மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த அந்த பெண்
 

மகாராஷ்டிராவில் தனியார் மருத்துவமனை ஒன்று, பாக்கி ரூ.8 லட்சத்தை கட்டாததால் இறந்த நோயாளியின் உடலை கொடுக்க மறுத்துள்ளது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலான பிறகு உடலை அந்த மருத்துவமனை கொடுத்துள்ளது.

மகாராஷ்டிராவில் தானே மாவட்டத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் ஒன்றில் கடந்த ஆகஸ்ட் 17ம் தேதியன்று உடல் நலக்குறை காரணமாக பெண் ஒருவரை அவரது கணவர் சேர்த்துள்ளார். அவருக்கு அந்த மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த அந்த பெண் கடந்த வியாழக்கிழமையன்று மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார்.

சடலம்

இதனையடுத்து இறந்து போன நோயாளிக்கு 39 நாட்களுக்கு சிகிச்சை அளித்தற்காக ரூ.32 லட்சத்துக்கான பில்லை அவரது கணவரிடம் மருத்துவமனை நிர்வாகம் கொடுத்தது. அதில் ரூ.8 லட்சம் மட்டுமே அவரது கணவர் பாக்கி வைத்து இருந்தார். இறந்த நோயாளியின் உடலை அடக்கம் செய்வதற்காக தரும்படி மருத்துவமனை நிர்வாகத்திடம் உறவினர்கள் கேட்டுள்ளனர். அதற்கு மருத்துவமனை நிர்வாகம் பாக்கி ரூ.8 லட்சத்தை கட்டினால் மட்டுமே உடலை தருவோம் என கூறியதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

மருத்துவமனை

இந்த விவகாரம் சமூகவலைதளங்களில் வைரலாக பரவியதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் நோயாளியின் உடலை உறவினர்களிடம் கொடுத்துள்ளது. ஆனால் மருத்துவமனை நிர்வாகம் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், இறந்த நோயாளியின் கணவர்தான் இரவில் மருத்துவமனையில் வைத்திருங்கள் காலையில் உடலை எடுத்துக்செல்கிறேன் என்றார் என தெரிவித்தது.