×

பதற வைக்கும் பெட்ரோல், டீசல் விலை.. உத்தர பிரதேசத்தில் மாட்டு வண்டியில் நடந்த திருமண ஊர்வலம்

உத்தர பிரதேசத்தில் மாட்டு வண்டியில் திருமண ஊர்வலம் நடந்த நிகழ்வு வைரலாகி வருகிறது. பெட்ரோல், டீசல் விலை மளமளவென உயர்ந்து வரும் சூழ்நிலையில், உத்தர பிரதேசம் தியோரியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மாட்டு வண்டியில் திருமணம் ஊர்வலம் நடந்தது வைரலாகி வருகிறது. மணமகன் தனது வீட்டிலிருந்து திருமணம் நடக்கும் இடம் வரையிலான 35 கி.மீட்டர் தூரம் மாட்டு வண்டியில் சென்றார். மணமகன் சோட் லால் பால் திருமணம் ஊர்வலம் தொடர்பாக கூறியதாவது: எனது திருமண ஊர்வலம் காளை மாட்டு
 

உத்தர பிரதேசத்தில் மாட்டு வண்டியில் திருமண ஊர்வலம் நடந்த நிகழ்வு வைரலாகி வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை மளமளவென உயர்ந்து வரும் சூழ்நிலையில், உத்தர பிரதேசம் தியோரியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மாட்டு வண்டியில் திருமணம் ஊர்வலம் நடந்தது வைரலாகி வருகிறது. மணமகன் தனது வீட்டிலிருந்து திருமணம் நடக்கும் இடம் வரையிலான 35 கி.மீட்டர் தூரம் மாட்டு வண்டியில் சென்றார்.

மாட்டு வண்டியில் திருமண ஊர்வலம்

மணமகன் சோட் லால் பால் திருமணம் ஊர்வலம் தொடர்பாக கூறியதாவது: எனது திருமண ஊர்வலம் காளை மாட்டு வண்டியில் நடக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். ஏனென்றால் வாகனங்கள் மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன. இது (மாட்டு வண்டியில் திருமண ஊர்வலம்) பழைய பாரம்பரியம். நமது புதிய தலைமுறைக்கு இது தெரியாது. தெரிந்தவர்கள் அவற்றை மறந்து விட்டார்கள்.

மணமகன் சோட் லால் பால்

நமது மூதாதையர்கள் திருமண ஊர்வலங்களுக்கு காளை வண்டிகளை பயன்படுத்தினர். இந்த மரபுகளை உயிரோடு வைத்திருக்க, எனது திருமண ஊர்வலத்தை காளை வண்டியில் நடத்த வேண்டும் என்று நினைத்தேன். குஷாரி கிராமத்தில் உள்ள எனது வீட்டிலிருந்து 35 கி.மீட்டர் தொலைவில் திருமணம் நடைபெறும் பக்ரி பஜாருக்கு காளை வண்டியில் செல்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.