☰
×

தாத்தா சொத்தில் பேரன் பங்கு கேட்க முடியாது - உச்சநீதிமன்றம்

 

தாத்தாவின் சொத்தைப் பாகப்பிரிவினை மூலம் தந்தை பெற்றிருந்தால், அந்தச் சொத்தில் பேரனுக்குப் பிறப்புரிமை கிடையாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

ஒரு தாத்தா தனது சொத்தைத் தன் பிள்ளைகளுக்குப் பகிர்ந்தளித்த பிறகு, அந்தச் சொத்தின் மீதான அனைத்து உரிமைகளும் அவர்களிடமே இருக்கும் என்றும், பேரனுக்குப் பிறப்புரிமை இருக்காது என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. தந்தையால் விற்கப்பட்ட தாத்தாவின் சொத்தில் பங்கு கோரி, தாயின் பராமரிப்பில் உள்ள ஒரு சிறுவன் தாக்கல் செய்த மனுவை விசாரித்தபோது நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியது. சொந்தக்காரர் இறந்த பிறகு பொருந்தக்கூடிய சட்டம் இந்த மனுவிற்குப் பொருந்தாது என்றும், மனுதாரரின் தந்தைக்குத் தன் தாத்தாவின் சொத்தை விற்க உரிமை உண்டு என்றும், அந்தச் சொத்தின் மீது பேரனுக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்து வாரிசுரிமைச் சட்டத்தின்படி தந்தைக்குக் கிடைத்த சொத்து அவரது தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும் எனக் கூறியுள்ள உச்சநீதிமன்றம், இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956-ன் பிரிவு 8-ன்படி, தாத்தாவிடமிருந்து சொத்தைப் பெறும் தந்தையே அதன் முழு உரிமையாளராகிறார். அந்தச் சொத்தை விற்பனை செய்வது, நிர்வகிப்பது அல்லது தனது மகனுக்கு உரிமை வழங்காமல் இருப்பது உள்ளிட்ட முடிவுகளை அவர் சுதந்திரமாக எடுக்கலாம். தந்தையின் சொத்தில் பங்கு கேட்டு மகன் தொடர்ந்த 29 ஆண்டுகால வழக்கை விசாரித்த நீதிபதிகள் அகஸ்டின் ஜார்ஜ் மாசி மற்றும் சுனிதா அகர்வால் அடங்கிய அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது.