×

‘பணத்திற்காக ஏ.டி.எம் இயந்திரத்தையே களவாடிய மர்ம கும்பல்’ : பரபரப்பு சம்பவம்!

அதிலாபாத் பகுதியில் கொள்ளையர்கள் ஏ.டி.எம் இயந்திரத்தையே கயிற்றைக் கட்டி இழுத்துச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. தெலுங்கானா மாநிலம் அதிலாபாத் டவுனில் நேற்று இரவு 4 பேர் கொண்ட மர்ம கும்பல் காரில் சுற்றித் திரிந்துக் கொண்டிருந்துள்ளது. அந்த கும்பல், நகைக்கடையில் கைவரிசையை காட்ட திட்டத்தை தீட்டியுள்ளனர். அந்த பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் பிளானை மாற்றிய கொள்ளையர்கள், அங்கிருந்து அதிலாபாத் டவுனில் இருந்து பாரத் ஸ்டேட் வங்கியின் ஏடிஎம்க்கு சென்றுள்ளனர். பின்னர், ஆளில்லாத நேரமாக பார்த்து
 

அதிலாபாத் பகுதியில் கொள்ளையர்கள் ஏ.டி.எம் இயந்திரத்தையே கயிற்றைக் கட்டி இழுத்துச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் அதிலாபாத் டவுனில் நேற்று இரவு 4 பேர் கொண்ட மர்ம கும்பல் காரில் சுற்றித் திரிந்துக் கொண்டிருந்துள்ளது. அந்த கும்பல், நகைக்கடையில் கைவரிசையை காட்ட திட்டத்தை தீட்டியுள்ளனர். அந்த பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் பிளானை மாற்றிய கொள்ளையர்கள், அங்கிருந்து அதிலாபாத் டவுனில் இருந்து பாரத் ஸ்டேட் வங்கியின் ஏடிஎம்க்கு சென்றுள்ளனர்.

பின்னர், ஆளில்லாத நேரமாக பார்த்து ஏடிஎம்மை கயிறு கட்டி இழுத்துச் சென்ற கொள்ளையர்கள் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து இயந்திரத்தை உடைத்து அதிலிருந்து பணத்தை எடுத்துக் கொண்டு சென்றுள்ளனர். இன்று காலை ஏ.டி.எம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வங்கி ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் ஒருவர் ஏ.டி.எம்மை கயிறு கட்டி இழுத்துச் சென்றது பதிவாகி இருந்துள்ளது.

அதனடிப்படையில், 4 பேர் கொண்ட கும்பல் பணத்தை திருடுவதற்காக ஏ.டி.எம்மையே கயிற்றை கட்டி இழுத்துச் சென்றிருப்பதாக அதிலாபாத் டி.எஸ்.பி தெரிவித்திருக்கிறார். ஏ.டி.எம்மில் இருந்து ரூ.20 முதல் 25 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்திருக்கும் அப்பகுதி போலீசார், கொள்ளையர்கள் பற்றிய தகவல்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.