☰
×

ஓட்டுக்கு மட்டன், சிக்கன், 7 குவார்ட்டர், ரூ.9500 கேஷ்- தோற்றுப்போன வேட்பாளர் சாமி படத்தோட வந்து வசூல் வேட்டை

 

ஆந்திராவில் ஓட்டுக்கு ஒரு கிலோ மட்டன், ஒரு கிலோ சிக்கன், 7 குவார்ட்டர் பாட்டில் சரக்கு, ரூ.9500 பணம் கொடுத்தும் தோற்றுப்போன வேட்பாளர் சாமி படத்துடன் வந்து வசூல் வேட்டையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திராவில் ஓட்டுக்கு கிலோ மட்டன், கிலோ சிக்கன், 7 குவார்ட்டர் சரக்கு, ரூ.9500 கேஷ்! தோத்துப்போன வேட்பாளர் சாமி படத்தோட வந்து வசூல் வேட்டை! வீட்டு சாமானை தூக்கிட்டு போன அவலம்! தமிழ்நாட்டுக்கும் எச்சரிக்கை! ஓட்டை வித்தா 5 வருஷம் அவனுக்கு அடிமை தான்!*

ஆந்திர உள்ளாட்சித் தேர்தலில்… pic.twitter.com/j9mgEEuWr4

— தங்க.காளிப்பாண்டி (@sureshkalipandi) November 8, 2026


ஆந்திராவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஒரு வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்று ஒரு குடும்பத்துக்கு ஒரு கிலோ மட்டன், ஒரு கிலோ சிக்கன், 7 குவார்ட்டர் பாட்டில் சரக்கு, ரூ.9500 பணம் கொடுத்துள்ளார்.  ஆனாலும் அவர் வெற்றி பெறவில்லை. தோற்றுப்போன ஆத்திரத்தில் இருந்த வேட்பாளர், சாமி படத்தை கையில் எடுத்து வந்து ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நின்று தெலுங்கில் சத்தியம் கேட்கிறார்.  "நீ எனக்கு தான் ஓட்டு போட்டேன்னு சாமி மேல சத்தியம் பண்ணு! நான் போயிடுறேன்! இல்லேன்னா நான் கொடுத்த பணம், மட்டன், சிக்கன், சரக்கு எல்லாத்தையும் திருப்பி கொடு!" எனக் கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருக்கிறது.  அந்த வீடியோவில் ஓட்டுக்கு கொடுத்தவற்றை குடும்பம் தரவில்லை! உடனே வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் எடுத்து செல்வதும் இடம்பெற்றுள்ளது
.