×

குரங்கு தள்ளிவிட்டதில் மூதாட்டி உயிரிழப்பு - கர்நாடகாவில் அதிர்ச்சி

 

கர்நாடகாவில் குரங்கு தள்ளிவிட்டதில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கர்நாடகாவின் கொப்பலில் உள்ள தனது வீட்டில் குரங்கு தாக்கியதில் 91 வயதான மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.  நஜமுன்னிசா பேகம் என அடையாளம் காணப்பட்ட அந்த மூதாட்டி, பிரபல எழுத்தாளர் எம்.எஸ். சாவதட்டியின் மனைவி ஆவார். அவரது குடும்பத்தினர் கூற்றுப்படி, பி.டி. பாட்டீல் நகரில் உள்ள தனது வீட்டின் வளாகத்தில் அவர் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, ​​திடீரென ஒரு குரங்கு அவர் மீது வேகமாக தாக்கியதில் அவர் கீழே விழுந்துள்ளார்.

A 91-year-old woman died a day after she was attacked by a monkey at her home in Karnataka's Koppal.

The woman, identified as Najamunnisa Begum, was the wife of noted writer M.S. Savadatti.

According to her family, she was walking through the compound of her house in B.T. Patil… pic.twitter.com/gEgdnkrdAO

— Hate Detector 🔍 (@HateDetectors) September 22, 2026


இந்தச் சம்பவம், வீட்டின் வெளியே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.  நஜமுன்னிசாவின் மகள் அவரை காப்பாற்ற முயற்சித்தபோது, ​​அந்தக் குரங்கு அவரையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. பின்னர் நஜமுன்னிசா சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆரம்பத்தில் அவர் குணமடைவது போல் தோன்றினாலும், பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்து, மறுநாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.