நண்பனுடன் பைக்கில் சாகச பயணம் சென்ற பெண் லாரி மோதி உயிரிழப்பு
பெங்களூருவில் நண்பருடன் பைக்கில் சென்ற 23 வயது பெண் லாரி மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெலமங்களா தாலுக்காவில் உள்ள வீரநஞ்சிபுரா பேரே அருகே, கேரளாவைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவர் தனது நண்பருடன் பைக்கில் பயணித்தபோது, லாரி ஒன்று அவர்கள் மீது மோதியதில் அவர் உயிரிழந்தார். உயிரிழந்த அலினா (23) என்பவர், தனது நண்பர் ஆல்பினுடன் துமகூரு மாவட்டத்தில் உள்ள தேவராயனதுர்கா மலைகளில் மலையேற்றம் முடித்துவிட்டு பெங்களூரு திரும்பிக்கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
தகவல்களின்படி, லாரி பைக் மீது மோதியதில் அலினா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆல்பினுக்கு லேசான காயங்கள் ஏற்பட்ட நிலையில், அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். கேரளாவைச் சேர்ந்த அலினாவும் ஆல்பினும், தங்களது படிப்புக்காக பெங்களூருவின் இந்திராநகரில் உள்ள ஒரு பேயிங் கெஸ்ட் (PG) விடுதியில் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. விபத்துக்குப் பிறகு லாரி ஓட்டுநர் நிற்காமல் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. ஓட்டுநரை அடையாளம் காணவும், வாகனத்தைக் கண்டறியவும் காவல்துறையினர் தகவல்களைச் சேகரித்து வருகின்றனர். அலினாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பபட்டுள்ளது. நெலமங்கலா போக்குவரத்து காவல்துறையினர் விபத்து நடந்த இடத்திற்குச் சென்று, வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்திவருகின்றனர்.