×

வாலிபால் விளையாடிக் கொண்டிருந்த 10ஆம் வகுப்பு மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு

 

மங்களூருவில் உள்ள சூரத்கல் அருகே  நண்பர்களுடன் கைப்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது 15 வயது மாணவன் மயங்கிவிழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

A 15-year-old Class 10 student died after suddenly collapsing while playing volleyball with friends near Surathkal in Mangaluru on Wednesday.

The deceased has been identified as Likhith Ameen, son of autorickshaw driver Madhav Ameen. He was a Class 10 student at Government High… pic.twitter.com/Pe2dglMYbo

— Hate Detector 🔍 (@HateDetectors) August 6, 2026


மங்களூருவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மாதவ் அமீனின் மகன் லிகித் அமீன். 15 வயதான லிகித், சூரிஞ்சே, கோட்டே பொல்லாருவில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று (ஆகஸ்ட் 5) ஆம் தேதி சூரிஞ்சேயில் உள்ள ஒரு விளையாட்டு மைதானத்தில் லிகித், தனது நண்பர்களுடன் கைப்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.  உடனடியாக அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு, அவரை மீண்டும் சுயநினைவுக்குக் கொண்டுவர மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததால், மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். அவர் மயங்கி விழுந்ததற்கான சரியான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. லிகித்துக்கு அவரது பெற்றோரும் இரண்டு சகோதரிகளும் உள்ளனர். அவரது திடீர் மரணம், அவரது குடும்பத்தினர், வகுப்புத் தோழர்கள் மற்றும் ஊர் மக்களை அதிர்ச்சியிலும் துக்கத்திலும் ஆழ்த்தியுள்ளது.