×

நெட் தேர்வர்களுக்கு சர்ப்ரைஸ் செய்தி.. ரிசல்ட் எப்போ தெரியுமா?

 

பல்கலைக்கழக மானியக் குழுவின் தேசிய தகுதித் தேர்வு (UGC NET) டிசம்பர் 2020 மற்றும் ஜூன் 2021 தேர்வுகள் மூன்று கட்டங்களாக நடத்தப்பட்டன. முதல் கட்டம் 20 நவம்பர் 2021 முதல் 5 டிசம்பர் 2021 வரை நடைபெற்றது. இரண்டாம் கட்டம் 23 டிசம்பர் 2021 முதல் 27 டிசம்பர் 2021 வரையும், ஆன்லைன் முறையில் நடைபெற்றது. தேசிய தேர்வு முகமை தேர்வுகளை நடத்தியது. இதனிடையே கொரோனா பெருந்தொற்று, ஜவாத் புயல் காரணமாக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. 

அந்த தேர்வுகள் மூன்றாம் கட்டமாக கடந்த மாதம் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் நடத்தப்பட்டது. இந்த தேர்வுகளின் முடிவுகள் அனைத்தும் கடந்த ஜனவரி 30ஆம் தேதி வெளியிடப்படும் என சொல்லப்பட்டது. இந்த தேர்வுகளில் கலந்துகொண்ட விண்ணப்பதாரர்கள் தங்கள் முடிவுக்காக நீண்ட நாட்களாகவே காத்திருக்கின்றனர். ஆனால் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தொடர்ந்து தாமதம் நிலவி வந்தது. 

இச்சூழலில் பல்கலைக்கழக மானிய குழு வட்டாரத்தில் இன்னும் ஓரிரு தினங்களில் நெட் தேர்வு முடிவை தேசிய தேர்வு முகமை அறிவிக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  NET 2022 தேர்வு முடிவுகள் UGC-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான ugcnet.nta.nic.in இல் வெளியிடப்படும். அதில் UGC NET 2021 RESULT இணைப்பை சொடுக்கி உங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி அல்லது கடவுச்சொல்லை உள்ளிட்டு உள்நுழைந்தால் தேர்வு முடிவுகள் திரையில் காண்பிக்கப்படும்.