×

#BREAKING கேரளாவில் இருவருக்கு குரங்கு அம்மை ?

 

கேரள மாநிலத்தில் வெளிநாட்டில் இருந்து திரும்பிய இருவருக்கு குரங்கம்மை அறிகுறிகள் இருந்ததை தொடர்ந்து அவர்களது மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குரங்கு அம்மை நோய் முதன் முதலில் 1958ம் ஆண்டு குரங்குகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நோய் பின்னாலில் மனிதர்களுக்கும் பரவ ஆரம்பித்தது. 1970ம் ஆண்டு தான் முதன் முதலில் மனிதருக்கு குரங்கு அம்மை நோய் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது.  வழக்கமாக மேற்கு மற்றும் மத்திய ஆப்ரிக்க நாடுகளில் பரவக்கூடிய நோயாகிய இந்த குரங்கு அம்மை நோய், ஐரோப்பிய நாடுகள் மற்றும் வட அமெரிக்காவில் பரவி வருவதன் காரணம் குறித்து ஆய்வு நடத்த உலக சுகாதார அமைப்பு உத்தரவிட்டது.  குரங்கம்மை வேகமாக பரவும் நோயல்ல என்றாலும்,  சமூக பரவலாக மாறக் கூடிய அபாயம் உள்ளது என்றும், எனவே இதனை கருத்தில் கொண்டு உலக நாடுகள் உடனடியாக எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உலக சுகாதார நிறுவனம்  அறிவுறுத்தியிருந்தது.

இதுவரை பிரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுக்கல், ஸ்பெயின், சுவீடன், இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 58 நாடுகளில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு குரங்கம்மை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இருந்த போதிலும் இந்தியாவில் அந்த வைரஸ் பரவமாலயே இருந்து வந்தது. இந்நிலையில், கேரளாவில் இருவருக்கு குரங்கம்மை தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டதை அடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஒருவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்தவர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றொருவர் குறுத்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.   இருவரின் மாதிரிகளும் புனேயில் உள்ள வைராலஜி நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இன்று மாலை அந்த பரிசோதனை முடிவுகள் கிடைக்கப்பெறும் என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.