×

தடுப்பூசி போட்டதில் மாணவி பலி!   ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு கேட்கும் தந்தை

 

கொரோனா தடுப்பூசி போட்டதில் மாணவி பலியானதாக புகார் எழுந்திருக்கிறது.  இதை அடுத்து அந்த தடுப்பூசி நிறுவனமான சீரம் நிறுவனத்திடம் ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.  

 மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் மருத்துவக் கல்லூரியில்  படித்து வந்த மாணவி சினேகல்.   இந்த மாணவி கடந்த 2021 ஆம் ஆண்டில் மார்ச் 1ஆம் தேதி என்று உயிரிழந்தார்.  அந்த மாணவியின் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி தான் காரணம் என்று சொல்லி அவரின் தந்தை மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

 அந்த வழக்கில் அவர் தாக்கல் செய்திருந்த மனுவில்,  என் மகளுக்கு கல்லூரியில் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது.   அதன் பின்னர் சில நாட்களில் அதிக தலைவலி வாந்தியால் அவதிப்பட்டாள்.   மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது மூளையில் ரத்த கசிவு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.  தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டாள்.

 தடுப்பூசி போட்டதில் பக்க விளைவால் தான் அவள் உயிரிழந்து விட்டாள்.  அதனால் கோவிஷீல்டு மருந்து தயாரித்த சீரம் நிறுவனம் ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு தர உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். 

 இந்த மனு நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது.   அப்போது,   இந்த மனு மீது பதில் அளிக்குமாறு சீரம் நிறுவனம்,  மத்திய,  மராட்டிய அரசுகள்.  இந்திய மருந்து கட்டுப்பட்டாளர் ஆகியோருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.   அது மட்டுமல்லாமல் இந்த வழக்கின் மறு விசாரணையை நவம்பர் 17ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.