×

ஜிப்மர் முன்பு போராட்டம் நடத்துபவர்கள் நோயாளிகளுக்கு எதிரானவர்கள் - தமிழிசை

 

இந்தி திணிப்பு என கூறி மருத்துவமனை முன்பு போராடுபவர்கள் ஜிப்மர் நோயாளிகளுக்கு எதிரானவர்கள் என துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராராஜன் கருத்து தெரிவித்துள்ளார். 

மத்திய பொருட்கள் மற்றும் சேவைவரி துறை சார்பாக அசதி க அம்ரித் மஹோத்சவ என்கிற  75வது சுதந்திர நினைவை கொண்டாடும் வகையில் சைக்கிள் பேரணி கடற்கரை காந்தி சிலை அருகே நடைபெற்றது. சைக்கிள் பேரணியை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார். சேவைவரி துறை அதிகரைகள் உட்பட  100 க்கு மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: புதுச்சேரி வளர்ச்சியை நோக்கி நகர்கிறது.   இந்த ஆண்டு முதல்முறையாக ஜிஎஸ்டி வருவாயாக 600 கோடி ரூபாய்  கிடைத்துள்ளதாகவும், அரசாங்கம் பல வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுத்து செயல்படுத்தியதால் இந்த வருவாய் நமக்கு கிடைத்துள்ளது. 

இதனால் நாம் அனைவரும் கட்டாயம் வரி செலுத்த வேண்டும் என்று கூறியவர், ஜிப்மர் மருத்துவமனையில் எங்கேயும் இந்தி திணிப்பு இல்லை. மக்களுக்கு அளிக்கப்படும் அத்தனை தகவல்களும் அறிக்கைகளும் தமிழில்தான் உள்ளது. தமிழ் பிரதானம், அதற்குப்பிறகு ஆங்கிலம், அதற்கு பிறகுதான் இந்தி. அங்கு பணிபுரிபவர்கள் இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள்.  பல இயக்கங்கள் போராட்டத்தை அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள் இது தவறான ஒரு அணுகுமுறை அது ஒரு மருத்துவமனை, பல இடங்களில் இருந்தும் குறிப்பாக தமிழகத்தில் இருந்தும் 60 சதவீதத்திற்கு மேல் அவசர மருத்துவ சேவைக்கு வருகிறார்கள். அரசியல் கட்சிகள் போராட்டம் நடைபெறுவதால் மக்களுக்கு அது இடையூறாக உள்ளது.  ஜிப்மர் முன்பு போராட்டம் நடத்துபவர்கள் நோயாளிகளுக்கு எதிரானவர்கள் என்றுதான் சொல்ல முடியும் என்று தெரிவித்தார்.