×

71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை - பிரதமர் மோடி வழங்கினார்.. 

 


ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 71 ஆயிரம் பேருக்கு பிரதமர் நரேந்திர மோடி பணி நியமன ஆடைகளை வழங்கி அவர்களுடன் காணொளி காட்சி வாயிலாக உரையாடினார்.

நாடு முழுவதும் பத்து லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க வகை செய்யும் ரோஸ்கர் மேளா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி வைத்தார். தொடங்கி வைத்த அன்றைய தினமே  முதல் கட்டமாக 75 ஆயிரத்து 226 பேருக்கு அரசு பணிக்கான ஆணைகளை அவர் வழங்கினார். அதன் பின்னர் மீண்டும் கடந்த நவம்பர் மாதம் 22ம் தேதி, 71,000 பேருக்கு இரண்டாம் கட்டமாக பணி நியமன ஆணைகளை வழங்கியிருந்தார்.  

இந்நிலையில் அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைப்புகளுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை இன்று  பிரதமர் மோடி வழங்கினார். மூன்றாம் கட்டமாக 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய அவர், பின்னர்  காணொளி காட்சி வாயிலாக பணி நியமன ஆணைகளை பெற்றவர்களிடம் பிரதமர் உரையாற்றினார். மேலும், கடந்த டிசம்பர் மாதம் புதிதாக பணியில் சேரும் ஒன்றரை லட்சம் பேருக்கு திறன் பயிற்சி அளிக்கும் முகாமையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.