×

எதிர்க்கட்சிகள் அமளி -  பிற்பகல் 2 மணி வரை இரு அவைகளும் ஒத்திவைப்பு

 

பணவீக்கம், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்டவைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மூன்றாவது நாளாக அமளியில் ஈடுபட்டதை தொடர்ந்து இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முன் தினம் தொடங்கியது.   இந்தக் கூட்டத் தொடரில் 24 மசோதாக்களை தாக்கல் செய்ய  மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், முதல் நாள் அவை தொடங்கியவுடன் அரிசி, தயிர் உள்ளிட்ட பண்டல் பொருள்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 5 சதவிகித ஜி.எஸ்.டி. வரியை திரும்பப் பெறக் கோரியும், பணவீக்கம் மற்றும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்டவற்றிற்கு எதிர்ர்பு தெரிவித்தும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபடத் தொடங்கினர். மாநிலங்களவை மற்றும் மக்களவையில் எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டதால், இரு அவைகளும் முதல் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே நேற்று  இரண்டாவது நாள் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து பிற்பகல் 2 மணி வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அதன் பின்னரும் எதிர்க்கட்சிகள் அமலியில் ஈடுபட்டதாள் நேற்றும் நாள் முழுவதும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில், இன்று மூன்றாவது நாள் அமர்வு இன்று காலை தொடங்கியது. அவை தொடங்கியது முதலே மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமலியில் ஈடுபட்டனர். பணவீக்கம், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்டவைக்கு எதிராக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி அவரை ஒத்திவைக்கப்பட்டன.