×

இன்றைய தினம் நாட்டுக்காக உயர்த்தியாகம் செய்தவர்களை நினைவுகூரும் தினம் - ஓம் பிர்லா

 

இன்றைய தினம், அன்னை பாரதத்திற்காக உயிர்த்தியாகம் செய்து நாட்டுநலனுக்கு பங்காற்றி, இன்றளவும் தொடர்ந்து உத்வேகம் அளிப்பவர்களை நினைவுகூரும் தினம் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறியுள்ளார். 

நாடு முழுவதும் 74வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல் அனைத்து மாநிலங்களில் தலைநகர்களிலும் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தந்த மாநில ஆளுநர்கள் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர்.  இதேபோல் தலைநகர் டெல்லியிலும் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பிரதமர் மோடி  இந்தியா கேட் அருகே உள்ள போர் வீரர்கள் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார். சென்டிரஸ் விஸ்டா திட்டத்தில் புனரமைக்கப்பட்ட கடமையின் பாதையில் குடியரசு தின விழா நடைபெற்றது.  டெல்லி கடமை பாதையில் ஜனாதிபதி திரவுபதி முர்முதேசிய கொடியை ஏற்றி வைத்தார்.  

இதேபோன்று, நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் மூவர்ண கொடியை ஏற்றி வைத்து வீரவணக்கம் செலுத்தினார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒவ்வொருவருக்கும் எனது மனப்பூர்வ வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இன்றைய தினம், அன்னை பாரதத்திற்காக உயிர்த்தியாகம் செய்து நாட்டுநலனுக்கு பங்காற்றி, இன்றளவும் தொடர்ந்து உத்வேகம் அளிப்பவர்களை நினைவுகூரும் தினம். அதனுடன், மிக பெரிய ஜனநாயகம் கொண்ட நாட்டின் அரசியல் சாசன வடிவமைப்பில் முக்கிய பங்கு வகித்தவர்களை நினைவுகூரும் தினமும் ஆகும் என்று அவர் கூறியுள்ளார்