×

“ஒரே நாடு ஒரே காவல் சீருடை” திட்டத்தை கொண்டுவர முடிவு- பிரதமர் மோடி

 

ஹரியானா மாநிலம்  சூரஜ்கண்டில் அனைத்து மாநில உள்துறை அமைச்சர்களுக்கான 2 நாள் சிந்தனை அமர்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தொடங்கி வைத்த நிலையில் பிரதமர் மோடி இன்று காணொளி வாயிலாக கலந்து கொண்டு பேசினார். 

அப்போது பேசிய பிரதமர் மோடி,  மாநில வாரியாக உள்ள காவல்துறையினர் அனைவரும் சமம் என்ற முறையிலும், அனைத்து அதிகாரிகளும் ஒரே தன்மை கொண்டவர்கள் என்பதை உணர்த்தும் வகையில்  “ஒரே நாடு ஒரே கா அல் சீருடை” திட்டத்தை கொண்டுவருவது குறித்து அனைத்து மாநிலங்களும் ஆலோசிக்க வேண்டும். குறிப்பாக, இவை திணிப்பு அல்ல என்றும் இது வெறும் பரிந்துரை மட்டுமே. இவற்றை பரிந்துரையாக எடுத்துக்கொண்டு ஆலோசிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், மாநில அரசு ஒத்துழைத்தால் இப்போதே நடைமுறைப்படுத்தாலாம் இல்லையென்றால் 50-100 வருடங்களுக்குள் நடக்கலாம். குற்றவாளிகளை கண்டறிய பாதுகாப்பு துறையின் ஒற்றுமையே முக்கியம். அதனை சீருடையில் இருந்து தொடங்கலாம். 

நம் நாட்டு மக்கள் சட்டத்தை மதித்து நடக்கும் நிலையில் அவர்களின் பாதுகாப்பு மற்றும் மக்களுக்கு எதிரான சக்திகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்க எடுக்க வேண்டியது மத்திய அரசு மற்றும் ஒவ்வொரு மாநில அரசின் பொறுப்பு. போலியான செய்திகள் நாட்டில் பெரும் புயலை உருவாக்கலாம் என்பதால் மக்களுக்கு சிந்திக்கும் திறனை கற்பிக்க வேண்டும். ஒரு விஷயத்தை நம்புவதற்கு முன் மக்கள் அதனை சார்பார்த்து கொள்ள வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக மாநில அரசுகள் பயங்கரவாதத்தின் அடித்தளத்தை உடைக்க சிறப்புடன் செயல்பட்டதாகவும், இனிமேலும் நக்சல்களை மற்றும் அவர்களின் வடிவங்களை கூட நாம் தோற்கடிக்க வேண்டும், அதாவது அது துப்பாக்கி ஏந்தி இருந்தாலும் சரி, கையில் பேனா ஏந்தி இருந்தாலும் சரி, அதற்கு எதிராகவும் நாம் தீர்வு காண வேண்டும்” என்று கூறினார்.