×

நான் ஒன்னும் ராயல் இல்லை; வேலை இல்லாதவன்- பிரதமர் மோடி

 

என் அந்தஸ்து குறித்து பேசுவதை விட்டுவிட்டு, வளர்ச்சி அரசியலை எதிர்க்கட்சிகள் பேச வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் சுரேந்திரங்கர் நகரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட பிரதமர் மோடி, “ எனக்கு எந்த அந்தஸ்தும் இல்லை, நான் காங்கிரஸ் கட்சியினர் போல ராயல் அல்ல, நான் உங்களில் ஒருவன், மக்கள் சேவகன். என் அந்தஸ்து குறித்தெல்லாம் பேசுவதை விட்டுவிட்டு, வளர்ச்சி அரசியலை பேச வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் தான் இந்த அவமானங்களையெல்லாம் முழுங்க கற்றுக்கொள்கிறேன்.


நீங்கள் அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள், நான் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவன், எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நான் ஒரு வேலைக்காரன் மற்றும் வேலையில்லாத வேலைக்காரன். என்னை அசிங்கமான, தாழ்ந்த சாதி, மரண வியாபாரி என்று அழைத்தீர்கள். களத்திற்கு வாருங்கள். குஜராத்தை வளர்ச்சியடையச் செய்வோம். அதிகாரத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக பாத யாத்திரை நடத்துகிறார்கள். பாதயாத்திரை மேற்கொள்பவர்களை இந்த தேர்தலில் குஜராத் மக்கள் தண்டிப்பார்கள். நர்மதா திட்டத்தை 40 ஆண்டுகளாக வழக்குகள் மூலம் முடக்கி, 40 ஆண்டுகளாக குஜராத்தை தாகத்தில் தவிக்கவைத்தவர்கள் காங்கிரசுடன் இணைந்துள்ளானர். நர்மதா திட்டத்திற்கு எதிராக செயல்பட்ட மேதா பட்கர் போன்ற நர்மதா ஆர்வலர்கள் ராகுலுடன் கைகோர்த்துள்ளனர்” எனக் கூறினார்.