×

ஆந்திரா, தெலுங்கானாவில் 38 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை; 4 பேர் கைது

 

ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களின் 38  பகுதிகளில் ( என்ஐஏ) தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி பணம், டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில்  தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் காவல் நிலைய போலீசார்  கடந்த ஜுலை 4 ம் தேதி அன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் (பிஎஃப்ஐ) நிர்வாகிகளாக உள்ள சந்தேகம்படும் வகையில் இருந்த அப்துல் காதர், ஷேக் சஹதுல்லா, எம்டி இம்ரான் மற்றும் எம்டி அப்துல் மொபின் ஆகிய 4 பேரை தெலுங்கானா போலீசார் கைது செய்தனர். இவர்கள் தீவிரவாத அமைப்புகளுடன் இணைந்து மதத்தின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை வளர்ப்பதற்கும் பயிற்சி அளிப்பதற்காக முகாம்களை ஏற்பாடு செய்து வந்ததும்.  பயங்கரவாதச் செயல்களைச் செய்வதற்கும் திட்டம் வகுத்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து தெலங்கானா மாநில போலீசாரிடம் இருந்து இந்த வழக்கை ஆகஸ்ட் மாதம் 26 ம் என்ஐஏ கையகப்படுத்தி பதிவு செய்தது. இன்று  என்.ஐ.ஏ. அதிகாரிகள் 38 வெவ்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இதில்  தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் 23, ஹைதராபாத்தில் 04, ஜகித்யாலில் 7, நிர்மலில் 2, அதிலாபாத் மற்றும் கரீம்நகர் மாவட்டங்களில் தலா 1, மற்றும் ஆந்திராவில் 02 இடங்களிலும் சோதனை நடத்தியது. 

தெலுங்கானா, நிஜாமாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் காதர் மற்றும் 26 பேர் தொடர்பான வழக்கில் ஆந்திராவில் (கர்னூல் மற்றும் நெல்லூர் மாவட்டங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.  என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில், டிஜிட்டல் சாதனங்கள், ஆவணங்கள், இரண்டு கத்திகள்,  ₹ .8 லட்சத்து 31 ஆயிரத்து 500 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும்  நான்கு பேர் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் இணைந்து சோதனை மேற்கொண்டதால் அக்கம் பக்கத்து வீட்டார் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. என்.ஐ.ஏ
 அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட பகுதியில் அருகில் யாரையும் அனுமதிக்கவில்லை. இந் நிலையில் ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தில் நடைபெற்ற சோதனையின் போது ஒரு பிரிவினர் என்.ஐ.ஏ சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பி ஆர்எஸ்எஸ்க்கு எதிராக முழுக்க எழுப்பினர்.