×

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 65 இருந்து அதிகரிப்பா? ஒன்றிய அரசு விளக்கம்

 

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் திட்டம் ஒன்றிய அரசிடம் இல்லை என்னும் மாவட்ட நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்ற நீதிபதிகளில் ஓய்வு வயதை நிர்ணயிப்பதில் ஒன்றிய அரசுக்கு எவ்வித பங்கும் இல்லை என சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளதா? இதற்காக சட்ட ஆணையம் ஏதேனும் பரிந்துரையை மத்திய அரசுக்கு வழங்கி உள்ளதா? எனவும் உயர் நீதிமன்றங்கள் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் உள்ள நீதிபதிகளின் பணி ஓய்வு வயதை அதிகரிக்க ஏதேனும் முன்மொழிவு மத்திய அரசிடம் உள்ளதா? என மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜு, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளின் ஓய்வு வயதை உயர்த்துவதற்கான திட்டம் மத்திய அரசிடம் இல்லை. உயர்நீதிமன்ற நீதிபதிகளில் ஓய்வு வயதை 65ஆக உயர்த்தும் பரிந்துரையை சட்ட ஆணையம் 58வது அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளதாகவும் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பது குறித்து சட்ட ஆணையத்தின் 232வது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டம் 235வது பிரிவின் கீழ் மாநிலங்களில் உள்ள மாவட்ட நீதிமன்றம் மற்றும் கிழமை நீதிமன்றங்கள் நிர்வாக கட்டுப்பாடு உயர்நீதிமன்றத்திடம் உள்ளது.  

உயர்நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி அந்தந்த மாநில அரசுடன் கலந்து ஆலோசித்து நியமனம், பதவி உயர்வு, இட ஒதுக்கீடு மற்றும் ஓய்வூதியம் தொடர்பான விதிகளை உருவாக்கி வருகிறார்கள். மேலும், மாவட்ட மற்றும் கீழமை நீதிபதிகளின் ஓய்வு வயதை நிர்ணயிப்பதில் ஒன்றிய அரசிற்கு எவ்வித பங்கும் இல்லை என எழுத்து பூர்வ பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.