×

கேரளாவில் பயங்கர நிலச்சரிவு; பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்

 

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு தாலுகாகனமழையால் மூணாறு அருகேவட்டவாடா சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. புதுக்குடி அருகே பெரிய அளவில் கற்கள், மண், மண் சரிந்து விழுந்தது.

இந்நிலையில் சாலையில் வழிந்து ஓடும்சேற்றில் ஜீப் மூலம் பயணம் செய்த போது சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் விழுந்தது கவிழந்தது.இதனால் இவ்வழியாக போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது. இன்று பெய்த கனமழையால் மூணாறு வட்டவாடா சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது.இன்று அப்பகுதியில் கனமழை பெய்தது.சாலையின் மேல் பகுதியில் இருந்து அதிக அளவில் கற்கள், மண், மண் சரிந்து விழுந்தது.

கோழிக்கோடிலிருந்து சுற்றுலா வந்த குழுவினர் டாப் ஸ்டேஷனை பார்வையிட்டு திரும்பும் போது புதுக்குடி அருகே நின்றுள்ளனர்அப்போது வாகனத்தில் இருந்த ஓட்டுனர் மற்றும் ஒருவர் தவிர மற்ற அனைவரும் வாகனத்தை விட்டு இறங்கினர். வாகனத்தை முன்னோக்கி நகர்த்த முற்பட்ட போது மேலிருந்து மேலும் சேறும் மண்ணும் விழுந்தது.வாகனம் சாலையோரம் இருந்த வளைவில் மோதி விபத்துக்குள்ளானது. கனமழையால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டது.எல்லப்பெட்டி அருகே சாலையில் மண் சரிவு விழுந்தது.மண்சரிவு காரணமாக மூணாறு வட்ட வடாசாலையில் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது.

கனமழையால் அப்பகுதியில் மலை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த பருவமழையில் புதுக்கடையில் இரண்டு முறை நிலச்சரிவு ஏற்பட்டது. இச்சம்பவத்தை தொடர்ந்து அந்த வழியாக செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.