×

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு!!

 

சபரிமலை ஐயப்பன் கோவிலில் சித்திரை விஷூ பண்டிகையை முன்னிட்டு இன்று கோவில் நடை திறக்கப்படுகிறது. 

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம். கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற 15ஆம் தேதி சித்திரை விஷு வழிபாடு நடைபெற இருக்கிறது.  இதன் காரணமாக இன்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.  நடை மாலை திறக்கப்பட்டு  இரவு 8 மணிக்கு  சாத்தப்படும்.   நாளை அதிகாலை நடை மீண்டும் திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

சபரிமலை ஐயப்பனை சித்திரை விஷு வழிபாடுகள் காரணமாக தரிசனம் செய்ய ஆன்லைன் பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது. கேரளாவில் தற்போது  கொரோனா தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளதால் கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டன. கட்டுப்பாடுகள் ஏதுமில்லாததால் பக்தர்கள் வருகை கணிசமாக அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.  சித்திரை விஷு பண்டிகை முன்னிட்டு கோவிலில் தினமும் சிறப்பு பூஜைகள்  நடைபெற உள்ள நிலையில்  15ஆம் தேதி சித்திரை விஷு வழிபாடுடன் கனிகாணும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.