×

இந்து அல்லாத மாணவர்களுக்கு பைபிள் கட்டாய கல்வி! பெங்களூரு பள்ளியின் நடவடிக்கையால் சர்ச்சை

 

பெங்களூருவில் நூற்றாண்டு பழமைவாய்ந்த கிருஸ்தவ கல்வி நிறுவனம் க்லெரன்ஸ் பள்ளி. இந்த பள்ளியில் இந்து அல்லாத மாணவர்களுக்கும் பைபிள் கல்வி கட்டாயமாக்கப் படுவதாக இந்து ஜன ஜாக்ருதி வேதிகே என்ற அமைப்பு குற்றம்சாட்டியது. இதுகுறித்து இந்த அமைப்பு கர்நாடகம் கல்வித்துறை அமைச்சர் நாகேஷ் உள்ளிட்ட பலரிடம் புகார் மனு அளித்தது. 

இதையடுத்து கர்நாடக கல்வித்துறை இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பிலும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய க்லெரன்ஸ் பள்ளி முதல்வர் ஜார்ஜ் மாத்யூ, “இந்த பள்ளியில் கட்டாயமாக வைத்து கற்றுத் தருவது கிடையாது. மாணவர்கள் தாமாக முன்வந்து கற்றுக்கொள்கிறார்கள். இதுவரை இதற்கு எதிராக எந்தக் கருத்தும் பதிவாக நிலையில் எந்த மாணவர்களும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அனைவருக்கும் முறையான கல்வி வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்த சர்ச்சை எழுந்துள்ளது. நாங்கள் இதை சட்டரீதியாக எதிர்கொள்ள தயாராக உள்ளோம், எந்த ஒரு மாணவரும் கல்வி மட்டும் தேவை பைபிள் தேவையில்லை என்று கூறினால் அவர்களுக்கு முழு சுதந்திரம் வழங்கப்படுகிறது.

இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட கர்நாடக பிசப் கருத்து தெரிவிக்கையில் கிறிஸ்துவ கல்வி நிறுவனங்களில் பயின்று வரும் வேறு மதத்தைச் சார்ந்த எந்த ஒரு மாணவரும் இதுவரை மதம் மாற்றம் செய்யப்பட்டது இல்லை என்பதை நாங்கள் உறுதியாக தெரிவிக்கிறோம். எங்களுக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் சிலர் நடந்து கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக இந்த அரசு செயல்படுவதாக நான் கருதுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.