×

 நடிகை சோனாலி  மரண வழக்கை சிபிஐக்கு மாற்றுக - கோவா அரசுக்கு ஹரியானா முதல்வர் கடிதம்..

 

நடிகை சோனாலி மரண வழக்கை சிபிஐ  விசாரணைக்கு பரிந்துரௌ செய்ய வலியுறுத்தி, கோவா அரசுக்கு  ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் கடிதம் எழுதியுள்ளார்.  

நடிகை,  பாஜக பிரமுகர் , tiktok மற்றும் பிக்பாஸ் பிரபலம் என பன்முகம் கொண்டவர் ஹரியானாவை சேர்ந்த சோனாலி. இவர் கடந்த  22 ஆம் தேதி கோவாவிற்கு சுற்றுலா சென்றிருந்தார். மறுநாள்  அங்குள்ள  கேளிக்கை விடுதியில் மர்மமான முறையில் மரணமடைந்தார் . இது தொடர்பாக விடுதியில் கிடைத்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர்.  சோனாலி உடலில் பல்வேறு காயங்கள் இருப்பதாக உடற்கூறாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டாரா என்றும் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், விடுதியில் போதையில் தள்ளாடியவாறு நடனமாடும் சோனாலிக்கு ஒரு நபர் வலுக்கட்டாயமாக குளிர்பானத்தை வாயில் ஊற்றும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த குளிபானத்தில்  போதைப்பொருள் கலந்து கொடுத்ததை அவரது  உதவியாளர்  சுதிர் சங்க்வான், சுக்விந்திர் சிங் ஆகிய இருவரும் ஒப்புக்கொண்டனர்.  அவர்கள் இருவரும் முதலில் கைது செய்யப்பட்ட நிலையில்,  கோவா சர்வீஸ் கிளப் உரிமையாளர்  மற்றும்  போதைப் பொருள் கடத்தல் காரர்களாக சந்தேகிக்கப்படும்  மற்றொருவரையும்  போலீசார் நேற்று கைது செய்தனர்.

 இந்நிலையில் இன்று   மற்றொரு நபர் பிடிபட்டுள்ளார்.  அவரும் போதைப் பொருள் விற்பனையாளர் என்பது தெரியவந்துள்ளது.  இதுவரை 5 பேர் இந்த வழக்கு தொடர்பாக கைதுன் செய்யப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் நடிகை சோனாலியின் மறைவுக்கு நீதி கிடைக்க உறுதி செய்ய வேண்டும் என அவரது குடும்பத்தினர் கேட்டுக் கொண்டதையடுத்து,  சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்குமாறு கோவா அரசுக்கு ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் கடிதம் எழுதியுள்ளார்.