×

மாணவர்கள் பாதியில் வெளியேறினால் முழுக்கட்டணத்தை கல்லூரிகள் தரவேண்டும் - யுஜிசி

 

மாணவர்கள் பாதியில் வெளியேறினால் முழுக்கட்டணத்தை கல்லூரிகள் தரவேண்டும் என்று யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான சியுஇடி தேர்வானது ஆகஸ்ட் 20ஆம் தேதியுடன் முடிவடைகிறது.  இத்தேர்வின் முடிவுகள் வெளியாக 15 நாட்களாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதே சமயத்தில் நீட் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.  இந்நிலையில் வேறு கல்லூரிகளில் பல்கலைக்கழகங்களில் முதலாம் ஆண்டு சேரும் மாணவர்கள் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் வேறு கல்லூரிக்கு மாற விரும்பினால் மாறிக் கொள்ளலாம் என்றும் அவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட கல்வி கட்டணத்தை முழுமையாக திருப்பி தர வேண்டும் என்றும் அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது .

 மாணவர்கள் தங்கள் சேர்க்கையை ரத்து செய்து வேறு கல்லூரியில் சேர்வதற்கு முன் வரும் பட்சத்தில் தனியாக கட்டணம் ஏதும் வசூலிக்கக்கூடாது என்று பல்கலைக்கழகம் மானிய குழு தெரிவித்துள்ளது.  அக்டோபர் மாதம்  வரையில் கல்லூரிகள் , பல்கலைக்கழகங்கள் மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என்றும் பெற்றோரின் நிதி சுமையை கருத்தில் கொண்டு நாட்டில் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் யுஜிசி தெரிவித்துள்ளது.