×

தடுப்பூசி பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் - மத்திய சுகாதாரத்துறை கடிதம்

 

கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதையொட்டி தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்துமாறு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலக்களுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது. 

இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 19,406 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின்  மொத்த  எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்தை தாண்டியுள்ளது. அத்துடன் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடந்த 24மணிநேரத்தில் 49 ஆக பதிவான நிலையில் மொத்த இறப்பு எண்ணிக்கை  5,26,649 ஆக அதிகரித்துள்ளது.

குறிப்பாக டெல்லி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இந்நிலையில், டெல்லி கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, ஒடிசா, தமிழகம் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட  மாநிலங்களின், சுகாதாரத்துறை செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளார்.அதில், தகுதியுள்ள மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த வேண்டும். அதனுடன் கோவிட் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதுடன், 5 வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். பண்டிகை காலம் நெருங்கி வருவதால் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.