×

#Justin CUET நுழைவுத்தேர்வு ஒத்திவைப்பு!!

 

தொழில்நுட்ப கோளாறு காரணமாக CUET நுழைவுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

 

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப்படிப்புகளை சேர்வதற்காக பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வான ஜூலை 15ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை 2 கட்டங்களாக நடைபெற நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை  அறிவித்தது.  அதன்படி கடந்த ஜூலை 15ஆம் தேதி முதல் 20-ம் தேதி வரை முதற்கட்ட தேர்வு நடைபெற்று விட்டது. இரண்டாம் கட்ட தேர்வு ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.  தேர்வு எழுதும் மாணவர்கள் என்டிஏ அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அதற்கான அட்மிட் கார்டினை  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.  கணினி வழியில் தமிழ், இந்தி  உட்பட 13 மொழிகளில் நடத்தப்படும்  இத்தேர்வு விண்ணப்பதிவானது கடந்த ஏப்ரல் 7ம் தேதி தொடங்கிய மே 31 ஆம் தேதி உடன் முடிவு பெற்றது.

இந்நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக CUET நுழைவுத்தேர்வு, ஆகஸ்ட் 12,13,14ம் தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட தேர்வு நடந்து முடிந்த நிலையில், 2ம் கட்டமாக ஆகஸ்ட்4,5,6,7,8,10 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த தேர்வு தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.