×

பாஜக கூட்டணி குடியரசு துணைத் தலைவர் வேட்பாளாராக ஜகதீப் தன்கர் அறிவிப்பு

 

பாரதிய ஜனதா கட்சியின் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராக உள்ள ஜெகதீப் தன்கர் அறிவிக்கப்பட்டுள்ளார்.


2017 ஆம் ஆண்டில், முன்னாள் பாஜக தலைவரும் மூத்த நாடாளுமன்ற உறுப்பினருமான அப்போதைய கேபினட் அமைச்சர் எம் வெங்கையா நாயுடுவை அக்கட்சி தனது துணை குடியரசுத்தலைவர் வேட்பாளராக அறிவித்தது. அவர் வெற்றிப்பெற்று, தற்போதைய துணை குடியரசு தலைவராக உள்ளார். அவரது பதவிக்காலம் ஆகஸ்ட் 10ம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்நிலையில் இந்திய துணை குடியரசுத் தலைவர் பதவிக்கு ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர் போட்டியிடுவார் என்று பாஜக தலைவர் ஜேபி நட்டா இன்று அறிவித்தார். டெல்லி தலைமையகத்தில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.