×

உலகின் தலைசிறந்த இசையமைப்பாளர் இளையராஜாவை அவமதிப்பதா? - ஜே.பி.நட்டா கண்டனம்

 

 உலகின் தலைசிறந்த இசையமைப்பாளர் இளையராஜாவின் கருத்து பிடிக்கவில்லை என்பதற்காக அவரை அவமதிப்பதா என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கேள்வி எழுப்பியுள்ளார். 

அம்பேத்கரும் மோடியும் நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ள இளையராஜா, மோடி ஆட்சியின் செயல்பாடுகளை கண்டு நிச்சயம் அம்பேத்கரே பெருமைப்படுவார்.  அம்பேத்கருக்கும் மோடிக்கும் நிறைய விஷயங்களில் ஒற்றுமை இருக்கின்றன.   இருவருமே ஏழ்மையையும் ஒடுக்குமுறையையும் அனுபவித்தவர்கள்.  அதை ஒழிக்க பாடுபட்டவர்கள்.  இருவருமே இந்தியாவின் மீது பெரிய கனவுகளை கண்டதுடன் செயல்பாடுகளின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் .  இப்படி இருவரும் ஒன்று படுவதை இந்த புத்தகம் எடுத்துக் காட்டுகிறது.   இதனை இளைய தலைமுறையினருக்கு நான் பரிந்துரைக்கிறேன் என்று அந்த நூலின் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார் இளையராஜா. இளையராஜாவின் இந்த கருத்துக்கு திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சமூக வலைதளங்களிலும் அவருக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.


இந்நிலையில், அம்பேதக்ருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்ட விவகாரத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இளையராஜாவுக்கு ஆதரவு அளித்துள்ளார்.  இது தொடர்பாக ஜே.பி.நட்டா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: உலகின் தலைசிறந்த இசையமைப்பாளர் இளையராஜாவை அவமதிப்பதா ? இளையராஜாவின் கருத்து பிடிக்கவில்லை என்றால் விமர்சிப்பதா? இதுதான் ஜனநாயகமா?  ஒரு குறிப்பிட்ட கட்சிக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் எதிரான கருத்தை தெரிவித்தால் எதிர்ப்பதா என கேள்வி எழுப்பியுள்ளார். அவர்களுக்கு ஆதரவாக பேசவில்லை என்பதால் அவரை விமர்சிப்பது தவறான அணுகுமுறை எனவும் குறிப்பிட்டுள்ளார்.